டி20 உலகக் கோப்பை நீக்கம்: சுப்மன் கில் எடுத்த முக்கிய முடிவு.. முழு விவரம்!

Shubman Gill: நட்சத்திர வீரர் சுப்மன் கில் ரோகித் சர்மா ஓய்வு அறிவித்த பின்னர் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் ஒருநாள் தொடரை வழிநடத்தும் வாய்ப்பையும் பிசிசிஐ ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து ஆசிய கோப்பைக்கு முன்னதாக டி20 அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். வரும் 2026 உலகக் கோப்பை தொடரிலும் துணை கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், உலகக் கோப்பைக்கு பின்னர் அவரை கேப்டனாக பிசிசிஐ அறிவிக்கும் என்றும் பேசப்பட்டு வந்தது. இந்த சூழலில்தான், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை தேர்வுக்குழு அளித்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

T20 World Cup Shubman Gill Removed: டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கம் 

கடந்த டிசம்பர் 20ஆம் தேதி 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சுப்மன் கில் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டிருந்தார். துணை கேப்டனாக மீண்டும் அக்சர் படேல் நியமிக்கப்பட்டார்.  இதற்கு முக்கிய காரணம், சுப்மன் கில் சமீப காலமாக மோசமான பேட்டிங்கை ஆடி வந்தார். இந்த ஆண்டில் அவர் விளையாடிய 15 டி20 போட்டிகளில் 300க்கும் குறைவான ரன்களையே எடுத்தார். இதில் அதிர்ச்சி என்னவென்றால் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்காததுதான். இது நிர்வாகத்தின் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 

Shubman Gill: சுப்மன் கில் முக்கிய முடிவு 

இதன் காரணமாகவே அவரை வெளியேற்றி அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் என்ற ஓப்பனிங் காம்பினேஷனுக்கு மீண்டும் சென்றுள்ளது அணி நிர்வாகம். இந்த முடிவை பலரும் பாராட்டி வந்தனர். ரசிகர்களும் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறக்கப்படுவதை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தான், டி20 உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில், ஒரு முக்கிய முடிவை கையில் எடுத்துள்ளார். சுப்மன் கில் மொஹாலி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

அதாவது விஜய் ஹசாரே டிராபி தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் அவர் அத்தொடரில் தனது திறமையை நிரூபித்து வரும் ஜனவரியில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாட தான் தற்போது தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வருகிறார் என சொல்லப்படுகிறது. மேலும், டி20 அணியில் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடித்து கேப்டனாக வேண்டும் என்பதற்காகவும் அவர் கடுமையாக உழைத்து வருவதாக கூறப்படுகிறது. 

Shubman Gill For Indian Team: இந்தியாவுக்காக சுப்மன் கில் 

26 வயதாகும் சுப்மன் கில் 2019ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார். இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் 2775 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது சராசரி 59.04ஆக உள்ளது. 39 டெஸ்ட் போட்டிகளில் 2839 ரன்கள் குவித்து 43.01 சராசரியுடன் உள்ளார். ஆனால் டி20 அணியில் கொஞ்சம் சொதப்பியே உள்ளார். அதில் 40 போட்டிகளில் விளையாடி 869 ரன்களை எடுத்துள்ள நிலையில், வெறும் 28.03 சராசரியையே வைத்துள்ளார். மேலும், இதுவரை மொத்தமாக 19 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.