Virat Kohli, Rohit Sharma In Vijay Hazare Trophy: இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்ததை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட்டில் இருந்து ஓய்வை முடிவை எடுத்தார். இந்த சூழலில், இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source
Rohit Sharma: பறிபோன ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி
இருவரும் வரும் 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற முடிவுடன் உள்ளனர். ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை எப்படியாவது அணியில் இருந்து நீக்கி சுப்மன் கில் தலைமையில் ஒரு இளம் வீரர்கள் கொண்ட அணியை உருவாக்க முயற்சித்து வருகிறார். இதன் முதற்கட்டமாக ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவியை பிடுங்கி சுப்மன் கில்லிடம் அளித்திருக்கின்றனர்.
Rohit Sharma, Virat Kohli: ஒருநாள் தொடரில் ரன்கள் குவித்த கோலி, ரோகித்
ரோகித் சர்மா கேப்டனாக தொடரும் பட்சத்தில் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது அதாவது ஃபார்ம் போன்ற காரணங்களை கூறி பெஞ்சில் அமர வைக்க முடியது என்பதற்காக முதற்கட்டமாக இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் தங்களது பேட்டின் மூலம் கம்பீருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். முதலில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் சிறப்பாக விளையாடி அசத்தினர். இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரிலும் சிறப்பாக விளையாடினர். விராட் கோலி 2 சதங்கள் மற்றும் 1 அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா தலா ஒரு சதம் மற்றும் அரைசதம் அடித்து அசத்தினார்.
Vijay Hazare Trophy 2025: விஜய் ஹசாரே தொடரில் அசத்தும் கோலி, ரோகித்
இந்த நிலையில், தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் இவர்களின் பங்களிப்பு அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பை அணிக்காக விளையாடும் ரோகித் சர்மா சிக்கிமுக்கு எதிராக 155 ரன்களை குவித்து அந்த அணியை வெற்றி பெற உதவினார். இதன் மூலம் ரோகித் சர்மா லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக 150+ ரன்கள் எடுத்த வீரர் என்ற டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்தார்.
Gautam Gambhir: கவுதம் கம்பீருக்கு அழுத்தம்
மறுபுறம் டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலி அந்திரா அணிக்கு எதிராக 131 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் 16,000 ரன்கள் அடித்த இந்திய வீரராக அவர் சாதனை படைத்தார். இப்படி முரட்டு ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மா, விராட் கோலி எப்படியாவது இந்திய அணியில் இருந்து தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் கம்பீருக்கு பதலடி கொடுத்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
About the Author
R Balaji