விலை குறைந்தது Google Pixel 9a! புத்தாண்டு அதிரடி சலுகையில் இப்போதே வாங்குங்கள்

Google Pixel 9a Discount Offer: ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள கூகுள் நிறுவனத்தின் Pixel 9a, தற்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் நடைபெற்று வரும் ஆண்டு இறுதி விற்பனையில் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பிரீமியம் அம்சங்களை பட்ஜெட் விலையில் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். டிசம்பர் 24 முதல் தொடங்கிய இந்தச் சலுகை மழை, இன்றிரவு 11:59 மணியுடன் முடிவடைகிறது.

Add Zee News as a Preferred Source

Google Pixel 9a விலை மற்றும் அதிரடி சலுகைகள்

கூகுள் நிறுவனம் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு வசதி கொண்ட பிக்சல் 9a (Google Pixel 9a) மாடலை ரூபாய் 49,999-க்கு அறிமுகப்படுத்தியது. தற்போது விற்பனையின் ஒரு பகுதியாக இதன் விலை ரூபாய் 44,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிகேபவள் உங்களிடம் HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் EMI முறையில் வாங்கினால், கூடுதலாக ₹5,000 வரை உடனடி தள்ளுபடி பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையை பொறுத்தவரை உங்கள் பழைய போனை மாற்றிக் கொள்வதன் மூலம் ₹44,300 வரை தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது. ஆனால் உங்கள் பழைய போனின் நிலை மற்றும் மாடலைப் பொறுத்து இந்தத் தள்ளுபடி மாறுபடும்.

Google Pixel 9a ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் (Specifications)

டிஸ்ப்ளே (Display): 6.3-இன்ச் Actua pOLED, 120Hz புதுப்பிப்பு வீதம், 2,700 நிட்ஸ் பிரகாசம்.

செயலி (Processor): கூகுள் டென்சர் G4 (4nm) – AI பணிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

மென்பொருள்: லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 (Android 15).

பேட்டரி : 5,100mAh பேட்டரி, 23W வயர்டு மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங்.

 Google Pixel 9a ஸ்மார்ட்போனின் அற்புதமான கேமரா தரம் 

புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்காகவே இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புற கேமராவை பொறுத்தவரை 48MP முதன்மை சென்சார் + 13MP அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளது. முன்புற கேமரா 13MP செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் மற்ற சிறப்பு அம்சங்கள் பற்றி பேசுகையில், பிக்சல் ஷிப்ட், அல்ட்ரா HDR, 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் கூகுளின் மேம்பட்ட AI கேமரா டூல்ஸ் உள்ளது.

Google Pixel 9a பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதி

நாள்தோறும் போனைப் பயன்படுத்துபவர்களுக்குத் தேவையான வலுவான பேட்டரி இதில் உள்ளது. 5,100mAh மெகா பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் உழைக்கும். 23W வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

அற்புதமான AI அம்சங்கள் மற்றும் சிறந்த கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனை வாங்க இதுவே சரியான தருணம். இன்றிரவுடன் சலுகை முடிவடைவதால், விரைந்து செயல்படுங்கள்!

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.