வாஷிங்டன் சுந்தருக்கு பதில்… இந்திய அணியில் இணைந்த முக்கிய வீரர்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 49 வது ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினர். ஹர்ஷித் ராணா பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் பங்களித்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 14ஆம் தேதி நடைபெறும் நிலையில், இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார். 

Add Zee News as a Preferred Source

 JUST IN 

Ayush Badoni has received a maiden call-up to the India ODI squad, coming in as a replacement for Washington Sundar.

He will link up with the squad in Rajkot, the venue for the second ODI.#INDvNZ pic.twitter.com/pR5OkMO5YU

— Cricbuzz (@cricbuzz) January 12, 2026

வாஷிங்டன் சுந்தருக்கு காயம் 

முதல் ஒருநாள் போட்டியில் பவுலிங் செய்து கொண்டிருந்தபோது வாஷிங்டன் சுந்தருக்கு விலா எலும்பு பகுதியில் திடீரென கடினமான வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் போட்டியில் தொடர்ந்து பந்து வீசவில்லை. பேட்டிங்கில் வேறு வழியில்லாமல் களமிறங்கிய அவரால் ஓட கூட முடியவில்லை. இருப்பினும் அணிக்காக சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு அவருக்கு மருத்துவ குழுவினரின் சோதனை நடைபெற்றது. இதில் அவரது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மீதமுள்ள போட்டிகளிலும் அவர் இடம் பெற மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக லக்னோ அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆயுஷ் பதோனி

கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் இடம் பிடித்து வருகிறார் வாஷிங்டன் சுந்தர். இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களிலும் சமீபத்திய ஒருநாள் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி இருந்தார். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரும் காயின் காரணமாக விலகி உள்ளது இந்திய அணி ரசிகர்ளுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அணியில் இணைந்துள்ள ஆயுஷ் பதோனி சமீபத்திய சையத் முஸ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் அவர் தற்போது இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இரண்டாவது ஒருநாள் போட்டி 

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது. ரிஷப் பந்த்திற்கு பதிலாக ஏற்கனவே துருவ் ஜூரில் அணியில் இணைந்த நிலையில், தற்போது வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி இணைந்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடாத ஆயுஷ் பதோனிக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியிலும் பல்வேறு இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இந்திய அணியிலும் அதிக இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் இந்த தொடர் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.