ஓய்வை அறிவிக்கும் முக்கிய இந்திய வீரர்… இதுவே அவருக்கு கடைசி தொடர் – முழு பின்னணி

India vs New Zealand ODI Series: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஓடிஐ போட்டி வரும் ஜன. 18ஆம் தேதி (ஞாயிறு) நடைபெற இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

இரு அணிகளுக்கும் இடையிலான ஓடிஐ தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் பெற்ற நிலையில், கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும். இதற்கு பின் இந்திய அணி சுமார் 6 மாதங்களுக்கு பின்னரே ஓடிஐ போட்டியில் விளையாடும். ஓடிஐ தொடருக்கு பின்னர் இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் டி20ஐ தொடர் நடைபெற இருக்கிறது.

Team India: 2027 உலகக் கோப்பைக்கு ரெடியாகும் இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடர் நிறைவடைந்ததும், பிப்ரவரி – மார்ச் வரை நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. அதன்பின் அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்திய அணி வீரர்களுக்கு சர்வதேச போட்டிகள் இருக்காது. ஏனென்றால், மார்ச் இறுதி முதல் மே மாத இறுதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறும். அடுத்து ஜூலை மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களில் மோதும். 

2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் ஐசிசி உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த உடன் இந்திய அணி, 2027 உலகக் கோப்பை தொடருக்குதான் தயாராகும். 2023இல் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை வந்து இந்தியா தோல்வியடைந்தது. எனவே, 2027 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா தீவிரமாக செயல்படும்.

Team India: ரோஹித், விராட்டுக்கு வாய்ப்புள்ளது

அதேநேரத்தில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் வரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவருமே டி20ஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், ஓடிஐ தொடர்களில் மட்டுமே விளையாடுகிறார்கள். இன்னும் 2027 உலகக் கோப்பைக்கு முன் வரை 21-25 ஓடிஐ போட்டிகள் இருக்கும் என்பதால் இவர்கள் உடற்தகுதியை பெற்றிருந்தால் நிச்சயம் ஓடிஐ அணியில் இடம்பிடிப்பார்கள் என கூறப்படுகிறது.

Ravindra Jadeja: ரவீந்திர ஜடேஜாவின் ஓடிஐ எதிர்காலம்

ஆனால், அதேநேரத்தில் ரவீந்திர ஜடேஜாவின் ஓடிஐ எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. ஜடேஜா டி20ஐ அரங்கில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றுள்ளார், ஓடிஐ மற்றும் டெஸ்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். டெஸ்டில் நம்பர் ஆல்-ரவுண்டராக திகழும் ஜடேஜா, ஓடிஐயில் அவருக்கான இடமே அணியில் இல்லை என்ற சூழல் நிலவுகிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த ஓடிஐ தொடரில் ஜடேஜா தேர்வு செய்யப்படவில்லை. இந்திய மண்ணில் நடக்கும் ஓடிஐ தொடர்களில் மட்டுமே அவர் தற்போது தேர்வாகிறார்.

Ravindra Jadeja: பேட்டிங்கில் பெரும் சொதப்பல்

அதிலும் கூட அவரால் பேட்டிங்கிலோ, பந்துவீச்சிலோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை. ஜடேஜாவின் பந்துவீச்சில் கேள்வி எழுப்புவது கடினம். ஒரு போட்டியில் சொதப்பினாலும் அடுத்து அவர் நிச்சயம் மீண்டுவருவார் என நம்பலாம். ஆனால் அவரிடம் இருக்கும் பெரிய பலவீனமே பேட்டிங்தான். அவரால் ஆட்டத்தை பினிஷிங் செய்ய இயலவில்லை. கடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ தொடரிலும் சரி, நியூசிலாந்துக்கு எதிரான கடந்த 2 போட்டிகளிலும் சரி அவரது பேட்டிங் சொதப்பலாகவே உள்ளது. அவர் பேட்டிங் செய்த கடைசி 4 ஓடிஐ இன்னிங்ஸில் 32(20), 24*(27), 4(5), 27(44) என சொதப்பலான ஆட்டத்தையே வெளிக்காட்டினார். அதேபோல், கடைசி 5 இன்னிங்ஸிலும் பந்துவீச்சில் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார். 

Ravindra Jadeja: 2027 உலகக் கோப்பைக்கு வாய்ப்பில்லை

நேற்றைய போட்டியில் ரன்களை குறைவாகவே கொடுத்தார் என்றாலும் ‘பழைய பன்னீர்செல்வத்தை’ தற்போதைய ஜடேஜாவிடம் பார்க்க முடியவில்லை. பீல்டிங்கில் இப்போதும் அவர் துடிப்போடுதான் இருக்கிறார், ஆனாலும் அவர் பீல்டிங்கில் செய்யும் ஓரிரு தவறுகளை பார்க்கும்போது அவருக்கும் வயதாகிவிட்டதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஆம், ஜடேஜாவுக்கும் 37 வயதாகிவிட்டது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பைக்கு வெறும் பந்துவீச்சுக்காக ஜடேஜாவை அணியில் சேர்க்க இயலாது, பேட்டிங் அவசியம்.

Ravindra Jadeja: ஜடேஜாவுக்கு பதில் அக்சர் பட்டேல் 

எனவே, ஜடேஜா இடத்தில் அக்சர் பட்டேல் இடம்பெறுவதை தவிர்க்கவே முடியாது. ஜடேஜாவுடன் ஒப்பிடும்போது பந்துவீச்சில் அக்சர் பட்டேல் சுமார் என்றாலும் பேட்டிங்கில் ஒரு படி உயர்ந்தே நிற்கிறார். மேலும், தென்னாப்பிரிக்காவில் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் சுழற்பந்துவீச்சுக்கு கைக்கொடுக்க இருப்பார்கள். அந்த வகையில் ஒரு இடதுகை ஸ்பின்னர் இந்திய அணிக்கு போதுமானது. இதையெல்லாம் கூட்டிக் கழித்து பார்க்கையில், ஜடேஜாவுக்கு இதுதான் கடைசி ஓடிஐ தொடராக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி முழுமையாக ஓடிஐ தொடரில் கவனம் செலுத்தும். அப்போது ஜடேஜா கழட்டிவிடப்பட்டு அக்சர் பட்டேல் அணிக்குள் வந்திருப்பார்.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர் சந்தேகம்… இந்த 3 வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு!

மேலும் படிக்க | IND vs NZ: ராஜ் கோட்டில் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்! கோச் ஓபன் டாக்

மேலும் படிக்க | இந்திய அணிக்கு சவுக்கடி… நியூசிலாந்துக்கு இது முக்கிய வெற்றி – ஏன் தெரியுமா?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.