தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் டிரோன் கேமரா பறக்க தடை மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வைத்துள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர் ஆகும், இது வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது; இங்கு செந்தில் ஆண்டவர் என்று அழைக்கப்படும் பாலசுப்பிரமணியசுவாமி (சண்முகர்) அருள்பாலிக்கிறார். இந்தத் தலம் சூரபத்மனை வென்ற இடமாகக் கருதப்படுகிறது. இதனால் இந்த கோவிலில் தினசரி பல ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து […]