ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
Add Zee News as a Preferred Source
ICC T20 World Cup 2026: 20 அணிகள் பங்கேற்பு
இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, அமெரிக்கா, நமீபியா உள்ளிட்ட அணிகள் ஏ பிரிவிலும்; ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, ஓமன், அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் பி பிரிவிலும்; ஆபகானிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் டி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், நேபாளம், இத்தாலி உள்ளிட்ட அணிகளுடன் சி பிரிவில் ஸ்காட்லாந்து அணி தற்போது இடம்பிடித்துள்ளது.
ICC T20 World Cup 2026: வங்கதேச வைத்த டிமாண்ட்
வங்கதேசம் அணி கடைசி நேரத்தில் இருந்து டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியதை தொடர்ந்து, ஸ்காட்லாந்து அணி சி பிரிவில் நேற்று சேர்க்கப்பட்டது. வீரர்களுக்கான பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட இயலாது என வங்கதேசம் அணி எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அனைத்து போட்டிகளையும் இலங்கையில் மாற்றினால் மட்டுமே தொடரில் விளையாடுவோம் என்றும் தெரிவித்தது.
ICC T20 World Cup 2026: சம்பவம் செய்த ஐசிசி
இதையடுத்து, ஐசிசி அதன் உறுப்பு நாடுகளை வைத்து நடத்திய கூட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் மட்டுமே ஆதரவளித்தது. மற்ற நாடுகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, வங்கதேசம் அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்த முடிவெடுக்க ஐசிசி வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு கெடு விதித்தது. ஆனால், வங்கதேசம் இந்தியாவில் விளையாட தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்தது. இதனாலேயே வங்கதேசத்திற்கு பதில் ஸ்காட்லாந்தை ஐசிசி சேர்த்தது.
ICC T20 World Cup 2026: வங்கதேச அணிக்கு எவ்வளவு கோடி இழப்பு?
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை தவறவிடுவதன் மூலம் வங்கதேச அணி வீரர்களுக்கும், வங்கதேச கிரிக்கெட் சங்கத்திற்கு எக்கச்சக்க இழப்பு ஏற்படும். குறிப்பாக, லீக் சுற்று போட்டிகளில் பங்கேற்றால் மட்டும் வங்கதேச அணிக்கு ரூ.2.7 கோடி முதல் ரூ.4.7 கோடி வரை வருவாய் கிடைக்கும், ஏற்கெனவே நிதிச் சிக்கலில் சிக்கித்தவிக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இதுவும் கிடைக்காமல் திண்டாடும். உறுப்பினர் பங்கேற்பு ஒப்பந்தத்தின் கீழ், தகுந்த காரணமின்றி ஐசிசி தொடரில் பங்கேற்காமல் இருந்ததற்கு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 18.3 கோடி ரூபாய் இந்திய மதிப்பில் ஐசிசி அபராதம் விதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இவற்றை ஐசிசி வருமான பகிர்வில்தான் பெரிய சிக்கல் வரும், அதில்தான் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஐசிசியின் மத்திய வருவாய் பட்டியலில் இருந்து வங்கதேசம் நீக்கப்பட்டால், இந்திய மதிப்பில் சுமார் 24.7 கோடி ரூபாய் வரை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. அதாவது இதுதான் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் 60% ஆகும்.
இதில் போட்டி ஒளிபரப்பு பங்கு, ஸ்பான்சர்ஷிப் பங்கு மற்றும் போட்டி தொடர்பான வருவாய் உள்ளிட்டவற்றின் இழப்பும் இதில் அடங்கும். இவ்வளவு பணத்தை இழந்தாலும் சரி, நிலைபாட்டை மாற்ற மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதம் பிடித்தது. நிதி இழப்புகளால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தவித்து வருகிறது. வங்கதேச வீரர்களை ஏற்கெனவே பாதிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவுக்குச் சொந்தமான பேட் ஸ்பான்சர்கள் வங்கதேச வீரர்களை தங்கள் ஒப்பந்தங்களில் இருந்து நீக்கியிருக்கின்றனர். இது வீரர்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | பாகிஸ்தான் அணிக்கு நிரந்தர தடை? இனி கிரிக்கெட் விளையாடவே முடியாது?
மேலும் படிக்க | இலங்கையா? இந்தியாவா? உலகக்கோப்பையில் வங்கதேசம் விளையாடுமா? 48 மணிநேர கெடு!
மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பை : வங்கதேசம் விலகல்! இந்த அணிக்கு அடித்த ஜாக்பாட்
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More