சென்னை: நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வீரதீர செயலுக்கான பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் முதல்வர் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் தமிழக அரசின் துறை […]