டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தின விழா ஒட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா பங்கேற்றுள்ளனர். டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 105 மிமீ இலகுரக கள பீரங்கிகளைக் கொண்ட பீரங்கி ஆயுத அமைப்பைப் பயன்படுத்தி, முழக்கமிடும் 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. செங்கோட்டையில் […]