டெல்லி: நடப்பு கல்வியாண்டு முதல் பாரா மெடிக்கல் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு (Paramedical) நீட் தேர்வு கட்டாயம் என தகவல் வெளியாகி உள்ளது. துணை மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு கட்டாயம் என்று தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (National Commission for Allied and Healthcare Profession) தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2026- 27ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]