இந்த CSK வீரருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? அவரே சொன்ன பதில்!

இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான். கடந்த 2024ஆம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். இது அவரது அசத்தலான உள்ளூர் ஆட்டத்தின் மூலம் நடந்தது. அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் சர்பராஸ் கானுக்கு சர்வதேச கரியரை தொடங்க வாய்ப்பு வழங்கினார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்றும் கூறலாம். அறிமுகமான முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 62 மற்றும் 68 ரன்கள் எடுத்து அசத்தி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார். 

Add Zee News as a Preferred Source

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து இந்திய அணியில் இடம் பிடித்த சர்பராஸ் கான், வங்கதேச அணிக்கு எதிராக 150 ரன்களை குவித்து அசத்தினார். இதனால் டெஸ்ட் அணியில் சர்பராஸ் கானுக்கான இடம் கிடைத்துவிட்டது, இனி தொடர்ந்து இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சற்று சொதப்பியதால் அதையடுத்து இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த சூழலில், தற்போது வரை இந்திய அணியில் இடம் பிடிக்காமல் தவித்து வரும் சர்பராஸ் கான், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அசத்தி வருகிறார். 

Sarfaraz Khan: எதிர்காலத்தை பற்றி யோசிப்பதில்லை – சர்பராஸ் கான்

இந்த நிலையில், ஓரண்டாக்கு மேலாக இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு சர்பராஸ் கான் பதில் கூறி உள்ளார். அவர் கூறியதாவது, நான் நிகழ்கால வாழ்க்கையை மட்டுமே வாழ முயற்சி செய்கிறேன். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை யோசிக்க முடியாது. நாளை என்ன நடக்கிறது என்பது குறித்தும் எனக்கு தெரியாது. எனவே பெரிதாக சிந்திக்காமல் இன்றைக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறேன். 

தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். எனது எண்ணம் எல்லாம் கிடைக்கும் வாய்ப்புகளில் சரியாக அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான். எதிர்காலத்தை பற்றி பெரிதாக சிந்திக்காமல், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். அதனை தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறேன் என கூறினார். 

Chennai Super Kings: சிஎஸ்கே பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா? 

சர்பராஸ் கான் சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் சிறப்பாக விளையாடினார். டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 75 லட்சத்திற்கு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டார். சர்பராஸ் கான் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கு நிச்சயம் சிஎஸ்கே பிளேயிங் 11ல் இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

IPL 2026: நிலையான இடம் கிடைக்க வேண்டும்

இதுவரை ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 40 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் 441 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சர்பராஸ் கானின் ரன் சேர்க்கை குறைவாக இருப்பதற்கு அவரது இடம் நிலையற்றதாக இருப்பதே காரணமாக பார்க்கப்படுகிறது. அவருக்கென ஒரு நிலையான இடம் கிடைத்தால் அழுத்தமின்றி அவரால் ரன்களை குவிக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.