"எனக்கு பிரதீப் ரங்கநாதனின் மேனரிஸமா?" – விமர்சனத்துக்குப் பதில் அளித்த அபிஷன் ஜீவிந்த்

‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘வித் லவ்’.

இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார்.

இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் ‘வித் லவ்’ படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ‘டூரிஸ்ட் பேமிலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

வித் லவ் படத்தில்...
வித் லவ் படத்தில்…

இப்படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருப்பதால் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அபிஷன் ஜீவிந்திடம், படத்தின் டீசரைப் பார்க்கும்போது பிரதீப் ரங்கநாதனின் மேனரிஸம் உங்களிடம் இருப்பதாக எழுந்த விமர்சனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “பிரதீப் ரங்கநாதனும் நானும் ஒரு படம் இயக்கிவிட்டு அடுத்த படத்தில் ஹீரோவாக மாறிவிட்டோம். அதனால் இதுபோன்ற கருத்து வருகிறது.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

டீசரில் வரும் காட்சிகள் பயங்கர எனர்ஜி காட்சிகளிலிருந்து வந்தது. அதற்கான காரணம் படத்தில் இருக்கிறது. ஆனால் படம் பார்க்கும்போது விமர்சனங்கள் காணாமல் போய்விடும் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.