Sanju Samson Latest News: இந்திய டி20 அணியில் மீண்டும் சுப்மன் கில் வந்ததன் பிறகு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இந்த சூழலில், சுப்மன் கில் சொதப்பிய நிலையில், அவரை டி20 அணியை விட்டு நீக்க வேண்டும் என்றும் கம்பீரின் வருகைக்கு பின்னர் அவருக்கு பிடித்தவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதனால் திறமை வாய்ந்த சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் ஒதுக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் வலுத்தது.
Add Zee News as a Preferred Source
குறிப்பாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு முன் இது தொடர்பான அழுத்தம் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு அதிகம் இருந்தது. இந்த சூழலில்தான், டி20ல் சொதப்பிய சுப்மன் கில்லை நீக்கிவிட்டு மீண்டும் அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சனை கொண்டு வந்து டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தனர். இந்த நிலையில், சஞ்சு சாம்சனும் சொதப்பி வருவது ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Sanju Samson Runs In NZ T20 Series: தொடர்ந்து சொதப்பிய சஞ்சு சாம்சன்
சர்வதேச டி20ல் இதுவரை 3 சதங்களை அடித்த சஞ்சு சாம்சன் உலகக் கோப்பைக்கு முன்பான நியூசிலாந்து தொடரில் கடுமையாக சொதப்பி உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் சஞ்சு சாம்சன் 10, 6, 0, 24 என மொத்தமாக வெறும் 40 ரன்களை மாட்டுமே எடுத்துள்ளார். இதுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
Sanju Samson vs Shubman Gill: சஞ்சு சாம்சன் vs சுப்மன் கில்
முதலில், சஞ்சு சாம்சனுக்கு பலரும் ஆதரவாக பேசிய நிலையில், தற்போது சஞ்சு சாம்சனுக்கு சுப்மன் கில்லே பரவாயில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 216 ரன்கள் இலக்காக இருந்தது. தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்களை இந்திய அணி இழந்த நிலையில், களத்தில் நிலைத்து ரன்கள் சேர்க்க வேண்டிய பொறுப்பு சஞ்சு சாம்சனுக்கு இருந்தது. ஆனால் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Sanju Samson: வாய்ப்பை வீணடித்த சஞ்சு சாம்சன்
சுப்மன் கில்லிடம் அதிரடியான ஆட்டம் இல்லையென்றாலும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஒரு முனையில் நின்று ரன்களை சேர்ப்பார். ஆனால் சஞ்சு சாம்சன் அதிரடியாகவும் ஆடாமல், நிதானமாகவும் இல்லாமல் விக்கெட்டை பறிகொடுத்தது விமர்சனங்களை கிளப்பி உள்ளது. உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், சஞ்சு சாம்சன் இப்படி கிடைத்த வாய்ப்பை வீணடித்துவிட்டார் என கடுமையாக சாடி வருகின்றனர்.
T20 World Cup 2024: உலகக் கோப்பை பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா?
சஞ்சு சாம்சனை நம்பி உலகக் கோப்பையில் அணியில் எடுத்த நிலையில், அவர் இப்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணி நிர்வாகத்தின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும். எனவே அவருக்கு பதிலாக உலகக் கோப்பையில் இஷான் கிஷனை களமிறக்கலாம் என்ற முடிவை எடுக்க நிர்வாகம் யோசிக்கலாம். உலகக் கோப்பையில் முதல் சில போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கலாம். அதில் சொதப்பும் பட்சத்தில் அவரது இடத்தில் இஷான் கிஷனை இறக்க கம்பீர் முற்பட வாய்ப்புள்ளது.
About the Author
R Balaji