டி20 உலகக் கோப்பை : சென்னையில் பயிற்சி ஆட்டம்! தேதி, நேரம் முழு விவரம்

T20 World Cup : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடைபெறும் இந்த பிரம்மாண்ட தொடருக்கு முன்னதாக, அணிகள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையில் பயிற்சி ஆட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி காத்திருக்கிறது. சென்னையில் நடக்கும் மொத்தம் நான்கு பயிற்சி ஆட்டங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

Add Zee News as a Preferred Source

சேப்பாக்கத்தில் போட்டி விவரங்கள்

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில், மொத்தம் 4 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. பெரிய அணிகள் இல்லாவிட்டாலும், வளர்ந்து வரும் அணிகளின் பலப்பரீட்சையை நேரில் காண சென்னை ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

பிப்ரவரி 2 – கனடா vs இத்தாலி, இரவு 7 மணி
பிப்ரவரி 3 – நேபாளம் vs ஐக்கிய அரபு அமீரகம், மாலை 5 மணி
பிப்ரவரி 5 – கனடா vs நேபாளம், மாலை 3 மணி
பிப்ரவரி 6 – இத்தாலி vs ஐக்கிய அரபு அமீரகம், மாலை 3 மணி

இந்திய அணி பயிற்சி ஆட்டம் எப்போது?

நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்த முறை ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடுகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் கடந்த முறை டி20 உலகக்கோப்பை இறுத்திப்போட்டியில் எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது. 2024 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதிய அதே அணிகள் மீண்டும் மோதுவதால் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கும்.

இந்தியா ‘ஏ’ அணியும் களத்தில்

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கவும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவும் ‘இந்தியா ஏ’ அணியும் பயிற்சி ஆட்டங்களில் களமிறங்குகிறது.

பிப்ரவரி 2 – இந்தியா ஏ vs அமெரிக்கா, நவி மும்பை, மாலை 5 மணி
பிப்ரவரி 6 – இந்தியா ஏ vs நமீபியா, பெங்களூரு, மாலை 5 மணி

உலகக்கோப்பை எப்போது தொடங்குகிறது?

பயிற்சி ஆட்டங்கள் பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. இதையடுத்து, பிப்ரவரி 7 ஆம் தேதி உலகக்கோப்பை தொடர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

மற்ற முக்கிய பயிற்சி ஆட்டங்கள்

பிப்ரவரி 2 – ஆப்கானிஸ்தான் vs ஸ்காட்லாந்து, பெங்களூரு – மாலை 3 மணி
பிப்ரவரி 3 – நெதர்லாந்து vs ஜிம்பாப்வே, கொழும்பு, மாலை 3 மணி
பிப்ரவரி 4 – அயர்லாந்து vs பாகிஸ்தான், கொழும்பு, மாலை 5 மணி
பிப்ரவரி 5 – நியூசிலாந்து vs அமெரிக்கா, நவி மும்பை, மாலை 5 மணி

இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்திய மண்ணில் உலகக்கோப்பை நடப்பதால், இந்த முறை கோப்பையை மீண்டும் இந்தியாவே வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தியாவின் டி20 உலகக்கோப்பை போட்டிகள்

பிப்ரவரி 4, புதன்கிழமை – இந்தியா vs தென்னாப்பிரிக்கா (பயிற்சி ஆட்டம்), டி.ஒய். பாட்டீல் மைதானம், நவி மும்பை, இரவு 7 மணி

பிப்ரவரி 7, சனிக்கிழமை – இந்தியா vs அமெரிக்கா (குரூப் ஏ – லீக் ஆட்டம்), வான்கடே மைதானம், மும்பை, இரவு 7 மணி

பிப்ரவரி 12, வியாழக்கிழமை – இந்தியா vs நமீபியா (குரூப் ஏ – லீக் ஆட்டம்), அருண் ஜேட்லி மைதானம், டெல்லி, இரவு 7 மணி

பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை – இந்தியா vs பாகிஸ்தான் (குரூப் ஏ – லீக் ஆட்டம்), ஆர். பிரேமதாசா மைதானம், கொழும்பு, இரவு 7 மணி

பிப்ரவரி 18 புதன்கிழமை- இந்தியா vs நெதர்லாந்து (குரூப் ஏ – லீக் ஆட்டம்), நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத், இரவு 7 மணி

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.