ICC T20 World Cup 2026, IND vs PAK: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் வரும் பிப். 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. 10வது டி20 உலகக் கோப்பை தொடரான இதில் மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன.
Add Zee News as a Preferred Source
ICC T20 World Cup 2026: வங்கதேசத்திற்கு பதில் ஸ்காட்லாந்து
மொத்தம் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்திய அணி இடம்பெற்றுள்ள ஏ பிரிவில் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சி பிரிவில் இடம்பெற்ற வங்கதேச அணி பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகிய நிலையில், அந்த அணிக்கு பதில் ஸ்காட்லாந்து அணி தேர்வாகி உள்ளது.
ICC T20 World Cup 2026: இலங்கையில் விளையாடும் பாகிஸ்தான்
பாகிஸ்தானும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உலகக் கோப்பைக்கான ஸ்குவாடை அறிவித்து, நிச்சயம் தொடரில் விளையாடும் திட்டத்தில் உள்ளது என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் அணி அதன் அனைத்து போட்டிகளையும் இலங்கையில்தான் விளையாட உள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றால், அப்போட்டியும் கொழும்புவிலேயே நடைபெறும்.
IND vs PAK: பாகிஸ்தான் அரசின் திடீர் உத்தரவு
இந்நிலையில், பாகிஸ்தான் அணி இலங்கைக்குச் சென்று ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால், இந்தியாவுக்கு எதிரான குரூப் சுற்று போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
IND vs PAK: ஐசிசி என்ன செய்யும்?
பாகிஸ்தான் அணி ஒருவேளை புறக்கணித்தால் ஐசிசி இதை ஏற்றுக்கொள்ளாது. எனவே, பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், வங்கதேச அணி இலங்கையில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணி விளையாட இருந்த இடத்தில் வங்கதேச அணிக்கு ஐசிசி வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வங்கதேச அணி அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தால் வேறு புதிய அணி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஐசிசி இது ஓரிரு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சஞ்சு சாம்சன், குல்தீப் இல்லை! டி20 உலகக் கோப்பையில் பிளேயிங் 11 – ஸ்ரீகாந்த் தேர்வு!
மேலும் படிக்க | நியூ. தொடரை வென்று இருந்தாலும்.. இந்திய அணியில் உள்ள 3 பெரிய பிரச்சனை!
மேலும் படிக்க | இந்திய அணிக்கு திரும்பும் MI வீரர்… ஆதனால் CSK வீரருக்கு ஆபத்து! ஏன் தெரியுமா?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More