When will Tilak Varma join with Indian team: டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பையை வென்று தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் உள்ளது. அதற்கேற்றவாறும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த தொடரையும் இந்திய அணி இழக்கவில்லை. என்னதான் இந்திய அணி நல்ல ஃபார்மில் இருந்தாலும், முக்கிய வீரரான திலக் வர்மா காயத்தால் விளையாடாமல் ஓய்வில் இருப்பது ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
திலக் வர்மா
திலக் வர்மா கடந்த சில வாரங்களுக்கு முன்பாக உள்ளூர் போட்டிக்கு தயாராகும்போது காயமடைந்தார். அதன் காரணமாக அவர், சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்து வந்தார். நியூசிலாந்து டி20 தொடரில் இருந்து விலகினார். இந்திய அணிக்கு பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி அசத்தி உள்ளார். குறிப்பாக ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். எனவே வரும் உலகக் கோப்பைக்கு இவர் ஒரு முக்கிய வீரராக திகழ்கிறார்.
காயத்தில் இருந்து மீண்ட திலக் வர்மா
இந்த சூழலில், உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக திலக் வர்மா இந்திய அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழும்பி உள்ளது. இந்த நிலையில், திலக் வர்மா விஷயத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது, திலக் வர்மா காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து தற்போது அவர் வலை பயிற்சியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இந்திய அணியுடன் திலக் வர்மா இணைவார்
திலக் வர்மா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவையும் தேசிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திலக் வர்மா விரைவில் இந்திய அணியுடன் இணைவார் என தெரிகிறது. அவர் இந்திய அணியில் இணையும் பட்சத்தில் அணி கூடுதல் பலம் பெறும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. திலக் வர்மா காயத்தில் இருந்து மீண்டும் பயிற்சி மேற்கொள்வது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திலக் வர்மா வருவதால், சஞ்சு சாம்சனுக்கு பிரச்சனை
நியூசிலாந்து தொடரில் திலக் வர்மா இடத்தில் இஷான் கிஷன் விளையாடி வருகிறார். தற்போது திலக் வர்மா அணிக்குள் இணைவதால், பிளேயிங் 11ல் சஜ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை.ஏனென்றால், சஞ்சு சாம்சன் நியூசிலாந்து தொடரில் கடுமையாக சொதப்பி இருக்கிறார். அவர் வெறும் 46 ரன்களை மட்டுமே அடித்திருப்பதால், திலக் வர்மாவுக்கு மாற்றாக விளையாடி அசத்திய இஷான் கிஷனை தொடக்க வீரராக களமிறக்கி திலக் வர்மாவை 3வது இடத்தில் விளையாட வைக்க நிர்வாகம் திட்டமிடும் என தெரிகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji