ICC T20 World Cup 2026, Warm Up Matches: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், லக்னோ ஆகிய 5 நகரங்களிலும்; இலங்கையில் கண்டி மற்றும் கொழும்பு நகரங்களிலும் இத்தொடர் நடைபெறுகிறது.
Add Zee News as a Preferred Source
ICC T20 World Cup 2026: இந்திய அணியின் போட்டிகள்
10வது ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்ல அணிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இதுவரை கோப்பையை வென்றிருக்கும் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் மீண்டும் கோப்பையை வெல்ல முனைப்பு காட்டும். இந்தியா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் அணி ஏற்கெனவே 2 முறை டி20 உலகக் கோப்பைய வென்றுள்ளன.
இந்திய அணி கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி ஒருமுறை கூட இழக்கவில்லை. அதே வெற்றிப் பயணத்தை தொடர இந்திய அணி முனைப்பு காட்டும். வரும் பிப். 7ஆம் தேதி அமெரிக்க அணியுடனும், பிப். 12ஆம் தேதி நமீபியா அணியுடனும், பிப். 15ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், பிப். 18ஆம் தேதி நெதர்லாந்து அணியுடனும் இந்திய அணி டி20 உலகக் கோப்பையின் குரூப் சுற்றில் மோத உள்ளது.
ICC T20 World Cup 2026: 16 பயிற்சி போட்டிகள்
குரூப் சுற்றில் இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியை கூட விளையாடாது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. டி20 உலகக் கோப்பைக்கான குரூப் சுற்று போட்டிகள் தொடங்குவதற்கு முன் நாளை (பிப். 2) முதல் பிப். 6ஆம் தேதிவரை 16 பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, நவி மும்பை, பெங்களூரு, கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் இந்த பயிற்சி போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
ICC T20 World Cup 2026: இந்திய அணிகளுக்கான பயிற்சி போட்டிகள்
இதில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வரும் பிப்ரவரி 4ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியை நவி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்திய அணி இந்த ஒரு பயிற்சி போட்டியில் மட்டுமே விளையாடுகிறது. இந்தியா ஏ அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளது. அதாவது, டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாகாத வீரர்கள் அடங்கிய இந்திய ஏ அணி நாளை (பிப். 2) அமெரிக்க அணியுடனும், பிப். 6ஆம் தேதி நமீபியா அணியுடனும் மோதுகிறது.
ICC T20 World Cup 2026: 3 சிஎஸ்கே வீரர்கள் யார் யார்?
அமெரிக்காவுக்கு எதிரான போட்டி நவி மும்பையிலும், நமீபியாவுக்கு எதிரான போட்டி பெங்களூருவிலும் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு பயிற்சி போட்டிகளுக்காக 14 வீரர்கள் அடங்கிய இந்தியா ஏ ஸ்குவாட் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா ஏ அணியில் திலக் வர்மா விளையாட உள்ளார். இதன்பின், பிப். 4ஆம் தேதி தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்திலும் திலக் வர்மா விளையாடுகிறார். காயத்தில் இருந்து மீண்டு வரும் அவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்த இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறார், திலக் வர்மா. இந்திய ஏ அணியில் உர்வில் பட்டேல், கலீல் அகமது, குர்ஜப்னீத் சிங் ஆகிய சிஎஸ்கே வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா ஏ அணி ஸ்குவாட்: பிரியன்ஷ் ஆர்யா, உர்வில் பட்டேல் (விக்கெட் கீப்பர்), நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, நமன் திர், அஷூடோஷ் சர்மா, மானவ் சுதார், விப்ராஜ் நிகம், கலீல் அகமது, குர்ஜப்னீத் சிங், ரவி பிஷ்னோய், குர்ஜப்னீத் சிங், மயங்க் யாதவ், அசோக் சர்மா.
மேலும் படிக்க | பறிபோன CSK வீரரின் வாய்ப்பு.. டி20 உலகக் கோப்பைக்கு தயாரான மாற்று வீரர்? முழு விவரம்
மேலும் படிக்க | CSK தவறவிட்ட தங்கம்… பதிரானாவை கழட்டிவிட்டது பெரிய தவறு – ஏன் தெரியுமா?
மேலும் படிக்க | சொந்த மண்ணிலும் சொதப்பிய சஞ்சு சாம்சன் – இனி இந்திய அணியில் இடமில்லை!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More