"சினிமா மீதான என் காதல் நீளும்"- சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த GVM நெகிழ்ச்சி

‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன்.

இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று திரைத்துறையில் பன்முகத் தன்மை கொண்ட கெளதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

இதனைக்கொண்டாடும் விதமாக சில தினங்களுக்கு முன் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது.

கெளதம் வாசுதேவ் மேனன்
கெளதம் வாசுதேவ் மேனன்

இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

இந்நிலையில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தனிப்பட்ட சாதனை அல்ல

அதில், “இந்த அற்புதமான, சவால்கள் நிறைந்தத் துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் என்பது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல.

இது, என்னுடன் பயணித்த எண்ணற்ற தனிநபர்களின் கனவுகள், அர்ப்பணிப்பால் தான் சாத்தியமானது.

என் மனதில் இருந்த கற்பனை கதாபாத்திரங்களுக்கு ஒரு ஆன்மாவையும், ஒரு குரலையும், ஒரு இதய துடிப்பையும் வழங்கியது நடிகர்களே, அவர்களுக்கு எனது நன்றிகள்.

யாருடைய படைப்புகள் எனக்குள் அந்த தீப்பொறியைப் பற்ற வைத்ததோ, அந்த திரைப்பட மேதைகளுக்கும், என் ஆரம்ப கால படிகளுக்கு வழிகாட்டிய என் வழிகாட்டிகளுக்கும் நன்றிகள்.

கெளதம் வாசுதேவ் மேனன்
கெளதம் வாசுதேவ் மேனன்

என்னுடைய கதைகளை வாழ்க்கைக்குள் வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றிகள்.

சினிமா மீதான என் காதல் நீளும். உங்கள் அங்கீகாரமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. அடுத்தப் படம் காத்திருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.