டி20 உலக கோப்பை எத்தனை மணிக்கு தொடங்கும்? எந்த சேனலில் பார்க்கலாம்?

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்காக பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியதால் அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும், எந்த சேனலில் பார்க்கலாம் போன்ற முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

Add Zee News as a Preferred Source

முதல் மற்றும் இறுதி போட்டி 

வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் இந்த டி20 உலக கோப்பை தொடர் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளே மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி பிப்ரவரி 7 ஆம் தேதி தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவை மும்பை மைதானத்தில் எதிர்கொள்கிறது. மேலும் அதே நாளில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்தையும் எதிர்கொள்கிறது. 

இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த போட்டி நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. காரணம் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. ஐசிசி தற்போது இதனை விசாரித்து வருவதால் விரைவில் இறுதி முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் இந்த போட்டியில் விளையாட மாட்டோம் என்று கூறினாலும் இந்திய அணி திட்டமிட்டபடி இலங்கைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மைதானங்கள் விவரம்

இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள 8 மைதானங்களில் இந்த டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள சென்னை சேப்பாக்கம், மும்பை வான்கடே, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும், இலங்கையில் உள்ள கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானம், கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானம் மற்றும் கண்டி பல்லேகலே மைதானம் ஆகிய இடங்களிலும் போட்டி நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் A-வில் இடம்பெற்றுள்ளது. இந்த குரூப்பில் பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. பிப். 7ம் தேதி இந்தியா vs அமெரிக்கா, பிப். 12ம் தேதி இந்தியா vs நமீபியா, பிப். 15ம் தேதி இந்தியா vs பாகிஸ்தான், பிப். 18ம் தேதி இந்தியா vs நெதர்லாந்து போட்டிகள் நடைபெறும். அனைத்து போட்டிகளும் இரவு 7 மணிக்கு தொடங்கும்.

சூப்பர் 8 மற்றும் அரையிறுதி

குரூப் சுற்று போட்டிகள் பிப்ரவரி 20 வரை நடைபெறும். அதை தொடர்ந்து பிப்ரவரி 21 முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தொடங்கும். மார்ச் 4 மற்றும் 5ம் தேதிகளில் அரையிறுதி போட்டிகளும், மார்ச் 8ம் தேதி இறுதி போட்டியும் நடைபெறும். அனைத்து போட்டிகளும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக பார்க்கலாம்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.