`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' – போட்டியிடுவதும் சந்தேகம் என அண்ணாமலை அறிவிப்பு

கோவை தனியார் ஹோட்டலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணாவின் ஆட்சிக்கும், தற்போதைய திமுகவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா.அண்ணாவின் குடும்பத்தினர் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

அண்ணாமலை

அண்ணாவுடையே குடும்பத்தினர் யாரும் அரசியல் பக்கமே வருவதில்லை. கருணாநிதியின் மகன், பேரன், கொள்ளு பேரன் வரை அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.  திமுக அமைச்சர்களுக்கு அண்ணாவை பற்றி 10 வரிகள் கூட எழுதத்தெரியாது.

என் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நான் கோவையில் இருக்கிறேன். அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்றும் தெரியவில்லை. அதற்கு காலமும், நேரமும் தான் பதில் சொல்லும்.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

இதன் காரணமாக சிங்காநல்லூர், விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இதைப்பற்றி எங்கள் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் சொல்லியுள்ளேன்.  

விஜய்யிடம் இன்ஜினே இல்லை

விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். நான் அவரை அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. எங்களிடம் டபுள் இன்ஜின் உள்ளது. விஜய்யிடம் இன்ஜினே இல்லை. விஜய்யிடம் வண்டி, பெட்ரோல் டீசல் எதுவும் இல்லை. வண்டியை இயக்கவும் யாரும் இல்லை. 234 தொகுதிகளுக்கு விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா.

விஜய்
விஜய்

தொண்டர்களிடம்  கைத்தட்டல், விசில் வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே விஜய் பேசுகிறார். மக்களுக்கு என்ன திட்டம் கொண்டு வரப் போகிறோம் என்று சிந்திக்க வைக்கும் வகையில் விஜய் எதுவும் பேசவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.