Madhavan: "நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்!" – நடிகர் மாதவன்

நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார்.

2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்திருந்தார் மாதவன்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

R Madhavan
R Madhavan

அந்தப் பேட்டியில் அவர், “‘விக்ரம் வேதா’ படம் என்னுடைய இந்த பிரேக்குக்குப் பிறகுதான் நடந்தது. ‘இறுதிச் சுற்று’ படத்திற்கு முன்பு, நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்.

அதனால்தான் ஒரு இடைவெளி எடுக்க வேண்டியிருந்தது. நான் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் பாடலுக்காக ஷூட்டிங் செய்துகொண்டிருந்தேன். ஆரஞ்சு பேண்ட், பச்சை சட்டை அணிந்து சாலையின் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருந்தேன்.

அப்போது அங்கே ஒரு சுவிஸ் விவசாயி உட்கார்ந்திருந்தார். தேநீர் குடித்தபடி எங்களை ‘இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்பது போலப் பார்த்தார்.

பல திறமைகளை நான் கொண்டிருக்கிறேன். ஆனால் என் திரைப்படங்களில் அவை எதையும் நான் காட்டவில்லை. பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது மட்டுமே நான் செய்த ஒரே முயற்சியாக இருந்தது.

அதன் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது என் தவறை உணர்ந்திருக்கிறேன்.

அதன் பிறகுதான் நான் விளம்பரப் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். சென்னையிலும் இந்தியாவின் பல இடங்களிலும் அதிகம் பயணம் செய்தேன்.

மாதவன்
மாதவன்

அந்த நான்கு ஆண்டு கால அனுபவமும், பெற்ற நுண்ணறிவும் தான் இப்போது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

நான் திரும்பி வந்தபோதுதான் என்னுடன் பணியாற்றிய பழைய இயக்குநர்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு முன்னோக்குச் சிந்தனை உள்ளவர்கள் இல்லை என்பது புரிந்தது. அதன் பிறகுதான் நான் புதிய இயக்குநர்களைத் தேட ஆரம்பித்தேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.