'இந்த' செய்கைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தான் – நீதிமன்றம் தீர்ப்பு

இன்னும் பலருக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கான வரையறைகள் என்னவென்று தெரிவதில்லை.

ஒரு பெண்ணிடம் ஆபாசமாகப் பேசினாலோ, தவறாக நடந்துகொண்டாலோ தான் பாலியல் தொந்தரவுகள் என்று நினைக்கப்படுகின்றன.

ஆனால், உண்மையில் பெண்ணிற்கு அசௌகரியம் தரும் வகையில் பார்த்தால் கூட அது பாலியல் தொந்தரவு தான்.

இதை மீண்டும் ஒரு வழக்கில் உறுதி செய்துள்ளது சண்டிகர் மாவட்ட நீதிமன்றம்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

அந்த வழக்கு என்ன?

2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு வெளியே பெருக்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது 62 வயதுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்தப் பெண்ணின் மீது 500 ரூபாய் நோட்டை வீசி உள்ளார். மேலும், கண் அடிப்பது, ஃபிளையிங் கிஸ் தருவது போன்ற செய்கைகளையும் செய்துள்ளார்.

அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் போதையில் இருந்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாரளிக்க, வழக்கு பதிவாகியுள்ளது.

தீர்ப்பு என்ன?

இந்த வழக்கை விசாரித்த சண்டிகர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் (Chief Judicial Magistrate) சச்சின் யாதவ், “பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தைக் குலைக்கும் வார்த்தை அல்லாத எந்தச் செயலும் பாலியல் தொந்தரவே. இதில் ஃப்ளையிங் கிஸ், கண் அடிப்பது ஆகியவையும் அடங்கும்” என்று தீர்ப்பளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.