சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம் திரும்ப பெற திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம் திரும்ப வாங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் நடந்து வருவதாக தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், டாஸ்மாக் மதுபானக் கடைகள் வேண்டும் என்பது ஆளும் திமுகவின் நோக்கமோ விருப்பமோ […]