2026 டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட படையாக இந்திய அணி களமிறங்குகிறது. ரோகித் சர்மா தலைமையில் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளார்.
Add Zee News as a Preferred Source
Team India: வலுவாக இருக்கும் இந்திய அணி
கோப்பை வெல்லும் அளவுக்கும் இந்திய அணி நல்ல திறனுடன் உள்ளது. 2024 உலகக் கோப்பைக்கு பின்னர் நடந்த எந்த ஒரு டி20 சர்வதேச தொடரிலும் இந்திய அணி தோல்வியை தழுவவில்லை. இந்த நிலையில், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இந்திய அணி குறித்து பேசி உள்ளார். அவர், இந்திய அணியில் ஒரே ஒரு விஷயம் கவலை அளிப்பதாக கூறி உள்ளார்.
MS Dhoni: தோனி எச்சரிக்கை
இது தொடர்பாக பேசிய தோனி, இந்திய அணி மிகவும் ஆபத்தான அணிகளில் ஒன்றாக உள்ளது. அவர்களிடம் அனைத்தும் இருக்கிறது. ஒரு சிறந்த அணிக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் உள்ளன. அதேபோல் டி20 கிரிக்கெட்டில் அவர்களுக்கு அனுபவம் உள்ளது. அழுத்தமான சூழலில், அதனை எப்படி எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் ஒரு விஷயம் எனக்கு கவலை அளிக்கிறது.
Dhoni Warns India: பனிபொழிவு என்றால் பிடிக்காது
இந்திய அணி எவ்வளவு வலுவாக இருந்தாலும், பனிபொழிவு என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. எனக்கு பொதுவாக பனிபொழிவு என்பது பிடிக்காது. அது முற்றிலுமாக ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும். பனிப்பொழிவு இருக்கிறது என்றால் நாம் கண்டிப்பாக டாஸ் வென்றாக வேண்டும். அப்படி டாஸ் வெல்லவில்லை என்றால், ஆட்டத்தின் பாதி நம் கையில் இல்லை என்பதே அர்தம்.
T20 World Cup 2026: டி20 ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்
ஆடுகளம் மற்றும் வானிலை இரு அணிகளுக்கும் சமமாக இருந்தால், இந்திய அணி கண்டிப்பாக பல போட்டிகளில் வெற்றி பெறும். அதேசமயம் ஒரு மோசமான நாள் அமைந்தால், ஆட்டமே மாறிவிடும் அல்லது நம் அணி வீரர்கள் இல்லை எதிரணி வீரர்களில் ஒருவர் திடீரென சிறப்பாக ஆடினால் அவ்வளவுதான். வெற்றி நம் கையை சென்றுவிடும் என தோனி கூறினார்.
India Squad For T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.