ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இத்தொடர் மார்ச் 08ஆம் தேதி முடிவடைகிறது. இத்தொடர் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. அவர்கள் அனைத்து அணிகள் குறித்து தங்களது கணிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source
IND vs SA Warm Up Match: இன்று பயிற்சி ஆட்டம்
இந்த சூழலில், டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இத்தொடருக்கான பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (பிப்ரவரி 04) இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோத உள்ளன. கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் இறுதி போட்டியில் மோதிக்கொண்டன. அதில் திரில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில், உலகக் கோப்பையில் மீண்டும் இவ்விரு அணிகள் மோதுவது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் தென்னாப்பிரிக்கா அணி எய்டன் மார்க்ரம் தலைமையிலும் களமிறங்குகிறது. இப்போட்டி நவி மும்பையில் இருக்கும் டிஒய் பாட்டீஸ் மைதானத்தில் இன்று மாலை 7 மணி அளவில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் தங்களுக்கு பயிற்சி எடுத்துக்கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பாகும். இரு அணிகளுமே பெரிய அணிகள் என்பதால், தங்களது அணியின் பலம் பலவீனம் என்ன என்பதை இப்போட்டியின் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.
Tilak Varma: அணிக்கு திரும்பிய திலக் வர்மா
இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா, காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான கடந்த பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்தார் திலக் வர்மா. அவர் நிச்சயம் இப்போட்டியிலும் விளையாடுவார். இவரை போலவே காயத்தில் வெளியேறிய வாஷிங்டன் சுந்தர் இன்னும் அணிக்கு முழுமையாக குணமடைந்து திரும்பவில்லை. எனவே அவர் அணியில் இடம் பெற மாட்டார்.
Sanju Samosn: சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை?
தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் இப்போட்டியில் இடம் பெற மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக இஷான் கிஷனை நிர்வாகம் முயற்சி செய்யும் என கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான இந்தியா ஏ அணி விளையாடியது. ஆனால் இப்போட்டி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக என்பதால், மெயின் அணி வீரர்களே பிளேயிங் 11ல் இடம் பெறுவார்கள்.
India vs South Africa: இந்தியா – தென்னாப்பிரிக்கா நேருக்கு நேர்
இதுவரை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 31 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் இந்திய அணி 18 முறையும் தென்னாப்பிரிக்கா அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
India Predicted Playing XI For SA Warm Up Match: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), சிவம் துபே, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.
South Africa Playing XI For IND Warm Up Match: தென்னாப்பிரிக்கா அணியின் உத்தேச பிளேயிங் 11
குயிண்டன் டி காக், எய்டன் மார்க்கரம், ரியான் ரிக்கல்டன், டெவால்ட் ப்ரிவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சன், ஜார்ஜ் லிண்டே, கேசன் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்க்யா.
About the Author
R Balaji