சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை விட அதிக வாக்குகளை தவெக கைப்பற்றும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக தவெக வளர்ந்துவிட்டதாக கூறிய பிரவீன் சக்ரவர்த்தி, தனித்து போட்டியிட்டால் 17 முதல் 18 சதவிகித வாக்குகளை கைப்பற்றுவார் என்றும் கணித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி உருவாகி உள்ளது. […]