e-Shram Card : தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, இ-ஷ்ரம் கார்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதில், 31 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏற்கனவே இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான 2021 ஆகஸ்ட் 26 அன்று இ-ஷ்ரம் இணையதளத்தை (eshram.gov.in) அறிமுகப்படுத்தியது. இந்த இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்யும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒரு யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) வழங்குகிறது.
Add Zee News as a Preferred Source
இ-ஷ்ரம் கார்டு முக்கிய தகவல்
இந்த கார்டுடன் மத்திய அரசின் பல முக்கிய திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், என்னென்ன திட்டங்களில் பயனடைந்திருக்கிறோம் என்பதையும் தொழிலாளர்கள் தெரிந்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதான் மந்திரி தெரு வியாபாரிகள் ஆத்மநிர்பர் நிதி (PMSVANidhi), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G), ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புறம் (PMAY-U), பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY), பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN), ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை (ONORC) மற்றும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) போன்ற திட்டங்கள் இந்த கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இ-ஷ்ரம் கார்டு கணக்கு எப்படி தொடங்கலாம்?
இ-ஷ்ரம் வெப்சைட், மொபைல் செயலி மூலம் இந்த கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். அருகில் உள்ள இசேவை மையம், உமாங் (UMANG) செயலி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
இ-ஷ்ரம் கார்டுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களான தினக்கூலிகள், சாலையோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், விவசாயிகள் போன்றோர் இந்த கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
இ-ஷ்ரம் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
– வயது 16 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
– நீங்கள் வருமான வரி செலுத்துபவராகவோ அல்லது EPFO மற்றும் ESIC உறுப்பினராகவோ இருக்கக் கூடாது.
– அமைப்பு சாரா தொழிலாளராக இருக்க வேண்டும்.
– ஆதார் கார்டு, மொபைல் எண், வங்கி கணக்கு, கல்விச் சான்றிதழ் மற்றும் தேவை
இ-ஷ்ரம் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
– முதலில் அதிகாரப்பூர்வ ஈ-ஸ்ரம் இணையதளமான eshram.gov.in பக்கத்திற்குச் செல்லவும்.
– முகப்புப் பக்கத்தில் வலதுபுறம் உள்ள ‘Register on e-Shram’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
– உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
– ஸ்கிரீனில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவிடவும்.
– உங்களுக்கு EPFO அல்லது ESIC கணக்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘No’ என்பதைத் தேர்வு செய்து, ‘Send OTP’ கொடுக்கவும்.
– மொபைலுக்கு வரும் OTP-யை உள்ளிட்டு, உங்கள் ஆதார் எண்ணைப் பதிவிடவும்.
– அதன்பின் உங்கள் பெயர், முகவரி, கல்வித் தகுதி, செய்யும் வேலை, மற்றும் வங்கி கணக்கு விவரங்களை ஒவ்வொன்றாகப் பூர்த்தி செய்யவும்.
– அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, அவற்றை ஒருமுறை சரிபார்த்து ‘Submit’ கொடுக்கவும்.
– இப்போது உங்கள் 12 இலக்க யுனிவர்சல் அக்கவுண்ட் எண் கொண்ட e-SHRAM கார்டு திரையில் தோன்றும். அதை நீங்கள் பிடிஎப் ஆக டவுன்லோட் செய்தோ அல்லது பிரிண்ட் எடுத்தோ வைத்துக் கொள்ளலாம்.
ஈ-ஸ்ரம் கார்டின் நன்மைகள்
விபத்துக் காப்பீடு: பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மூலம் விபத்தினால் இறப்பு ஏற்பட்டால் ரூ.2 லட்சம் மற்றும் ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.
அரசு நலத்திட்டங்கள்: பேரிடர் காலங்களில் அரசு வழங்கும் நேரடி பண உதவி உங்கள் வங்கி கணக்கிற்கு வரும்.
வேலைவாய்ப்பு: உங்கள் திறமைக்கேற்ப எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
உங்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்யத் தெரியவில்லை என்றால், உங்கள் அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் சந்தேகங்களுக்கு 14434 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More