With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!

இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே இப்படம் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன், வித் லவ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாகவும், நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படத்தின் ரிலீஸை ஒட்டி, சென்னை சத்யம் திரையரங்கில் படக்குழுவினருக்காகச் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவருடன் நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டு படம் பார்த்தனர்.

படம் முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, தனது டிரேட்மார்க் பாணியில் “படம் Very Nice… சூப்பர்… சிறப்பாக வந்துருக்கு” எனப் பாராட்டினார். மேலும், ஒரு தயாரிப்பாளராகத் தனது மகளின் பணி திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் மனதாரத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.