அனுபவம் எல்லாம் தேவை இல்லை! முக்கிய வீரரை கழட்டிவிட இந்தியா முடிவு!

அனைவரும் அதிகம் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த பயிற்சி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சஞ்சு சாம்சன் அல்லது இசான் கிஷன் இருவரில் யார் விளையாடுவார்கள் என்ற குழப்பம் நிலவிய வந்து நிலையில், அதற்கு இந்த பயிற்சி ஆட்டம் விடை அளித்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

சஞ்சு சாம்சன் சறுக்கல்!

இந்திய டி20 அணியில் தனக்கான இடத்தை பிடித்து வைத்திருந்தார் சஞ்சு சாம்சன். 2024 டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார். ஆசிய கோப்பையில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், நியூசிலாந்து தொடரில் மீண்டும் ஓப்பனிங் வீரராக களமிறங்கினர். இருப்பினும் அவரால் போதிய இம்பேக்ட்டை செய்ய முடியவில்லை. மொத்தமாக அந்த தொடரில் வெறும் 46 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றினார். இந்நிலையில் இஷான் கிஷன்  தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய இடத்தை பிடித்துக் கொண்டுள்ளார். குறிப்பாக தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஓப்பனிங் வீரராக களமிறங்கி வெறும் 20 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். இது கேப்டன் சூரிய குமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. 

முதல் போட்டியில் மாற்றம் 

பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் அமெரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் இடம் பெற மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களம் இறங்க உள்ளனர். மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவும், நான்காவது இடத்தில் சூரிய குமார் யாதவும் விளையாட உள்ளனர். அதனை தொடர்ந்து சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல் ஆகியோர் ஆட்டத்தின் தன்மை பொறுத்து களமிறங்குவார்கள். பவுலிங்கில் பும்ரா, அர்ஸ்தீப் சிங் மற்றும் வருண் ஆகியோர் இடம்பெற உள்ளனர். இதுதான் இந்திய அணியின் பிளேயிங் 11 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்படாத வரை இந்த பிளேயிங் 11 அனைத்து போட்டிகளிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய உத்ததேச அணி

அபிஷேக் சர்மா

இஷான் கிஷன்

திலக் வர்மா

சூர்யகுமார் யாதவ்

அக்சர் படேல்

ஹர்திக் பாண்டியா

ரிங்கு சிங்

சிவம் துபே

அர்ஷ்தீப் சிங்

ஜஸ்பிரித் பும்ரா

வருண் சக்கரவர்த்தி.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.