சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை யாராக இருந்தாலும் கூட்டணி வைத்தால்தான் வெற்றி பெற முடியும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் கலந்து கொண்ட செல்வப்பெருந்தகை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் கூட்டணி வைத்தால்தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியும் என கூறிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் என்ன செய்தாலும் பாஜகவால் காலூன்ற முடியாது என்றும் விமர்சித்தார். […]