இந்திய அணி தற்போது தீவிரமாக டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், இத்தொடரில் தனக்கான இடத்தில் உறுதி செய்திருக்கிறார் இஷான் கிஷன். இது மிகவும் குறுகிய காலகட்டத்தில் நடந்ததாக பார்க்கப்பட்டாலும், இதற்கு பின்னர் இஷான் கிஷனின் கடும் உழைப்பு உள்ளது.
Add Zee News as a Preferred Source
Ishan Kishan In 2026 SMAT: இஷான் கிஷன் SMAT தொடரில் 517 ரன்கள்
இந்திய அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மணக்கசப்பு காரணமாக ஒருசில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இஷான் கிஷன் இருந்தார். இந்த நேரத்தில் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை மெருகேற்றி கொண்டார். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி டிராபி (SMAT) தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இத்தொடரில் அவர் 517 ரன்களை குவித்தார்.
Team India: இந்திய அணியில் எண்ட்ரி
இதன் விளைவாக டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி இருந்தது. இந்த சூழலில், முக்கிய வீரரான திலக் வர்மா காயம் பெற்று நியூசிலாந்து தொடரில் இருந்து வெளியேற, அவரது இடத்தில் இஷான் கிஷன் நியூசிலாந்து தொடரில் விளையாடினார். 4 போட்டிகளில் விளையாடிய அவர், 215 ரன்கள் குவித்தார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் தனக்கான இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
Sanju Samson Bad Form: சஞ்சு சாம்சன் சொதப்பல்
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்க சஞ்சு சாம்சனை திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் தான், சஞ்சு சாம்சன் நியூசிலாந்து தொடரில் கடுமையாக சொதப்பினார். தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடிய அவர் வெறும் 46 ரன்களை எடுத்து தற்போது தனது இடத்தில் இழந்துள்ளார். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுப்பது சந்தேகம். அது சாத்தியமற்றதும் கூட.
Ishan Kishan: இஷான் கிஷனுக்கு பெருகும் ஆதரவு
முன்னாள் வீரர்கள் கூட ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறி இருக்கின்றனர். உதாரணத்திற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சஞ்சு சாம்சனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. அவர் எதாவது ஒரு போட்டியில் ஃபார்முக்கு திரும்புவார் என்று காத்திருப்பதை விட, தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷன்தான் தற்போது இந்திய அணிக்கு தேவை என கூறி உள்ளார்.
India vs South Africa Warmup Match: பயிற்சி போட்டியிலும் இஷான் கிஷன் அசத்தல்
இஷான் கிஷன் தற்போது செம ஃபார்மில் உள்ளார். நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைக்கானபயிற்சி ஆட்டத்தில் கூட 20 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அசத்தி உள்ளார். தொடர்ந்து தன்னை நிரூபித்து வரும் இஷான் கிஷன் கண்டிப்பாக டி20 உலகக் கோப்பையின் பிளேயிங் 11ல் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக விளையாடுவார் என தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் டி20 உலகக் கோப்பை முடிந்த பின்னர் கூட, டி20 அணியில் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sanju Samson Comeback Chance: சஞ்சு சாம்சன் அவரை நிரூபிக்க வேண்டும்
சஞ்சு சாம்சன் தற்போது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ரன்களை குவித்து அவரை நிரூபித்தாக வேண்டும். அப்போதுதான் மீண்டும் அவருக்கான வாய்ப்பு கதவுகள் திறக்கும். எனவே தற்போதைய சூழலில், அவருக்கு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
India Squad For T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji