மருத்துவமனையில் CSK வீரர்… முக்கிய போட்டிக்கு முன் இப்படி ஆயிருச்சே…!

CSK Player Hospitalized: கிரிக்கெட் உலகில் தற்போது டி20 திருவிழா நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் (பிப்ரவரி 7) ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது. இத்தொடர் மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெற இருக்கும் சூழலில், மார்ச் மாத இறுதியில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

Ranji Trophy 2025-26: காலிறுதியில் 8 அணிகள்

இது ஒருபுறம் இருக்க, இந்திய உள்நாட்டு தொடரான ரஞ்சி கோப்பை 2025-26 தொடரின் காலிறுதிச் சுற்று நாளை (பிப். 6) தொடங்குகிறது. வங்காளம், ஆந்திரா, ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், மும்பை, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளன. பிப். 15ஆம் தேதி அரையிறுதிப் போட்டிகளும், பிப். 24ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.

Ranji Trophy 2025-26:  கர்நாடகா vs மும்பை

42 முறை ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணி, இந்த முறை காலிறுதியில் பலம் பொருந்திய கர்நாடக அணியை சந்திக்கிறது. இப்போட்டி மும்பை எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. மும்பை அணிக்கு ஷர்துல் தாக்கூர், கர்நாடக அணிக்கு மயங்க் அக்ரவால் ஆகியோர் கேப்டனாக செயல்படுகின்றனர். 

கர்நாடக அணி பி பிரிவில் 7 போட்டிகளில் விளையாடி 3இல் வென்று, 1இல் மட்டுமே தோற்றது, 3 போட்டிகளை டிரா செய்திருந்தது. மொத்தம் 27 புள்ளிகள் பெற்று பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. மறுபுறம் டி பிரிவில் மும்பை அணி, 7 போட்டிகளில் 4இல் வென்று, 3 போட்டிகளை டிரா செய்தது. தோல்வியே அடையாமல் 33 புள்ளிகளுடன் டி பிரிவில் முதலிடத்தை பிடித்து காலிறுதியில் விளையாட உள்ளது.

Ranji Trophy 2025-26: நட்சத்திர வீரர்கள்

கர்நாடக அணியில் மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் கோபால், கேஎல் ராகுல்,  கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, தேவ்தத் படிக்கல், வைஷாக் விஜயகுமார், அபினவ் மனோகர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர். மும்பை அணியை பொருத்தவரை அஜிங்கயா ரஹானே, ஷர்துல் தாக்கூர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முஷீர் கான், துஷார் தேஷ்பாண்டே, தனுஷ் கோட்டியான், ஷம்ஸ் முலானி,  அங்கிரிஷ் ரகுவன்ஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

Ranji Trophy 2025-26: மருத்துவமனையில் சர்பராஸ் கான்

இதில் மும்பை அணியின் நட்சத்திர வீரும், சிஎஸ்கே அணி வீரருமான சர்பராஸ் கான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இதனால் அவர் ரஞ்சி கோப்பை தொடரின் நாளைய காலிறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

மும்பை கிரிக்கெட் வாரியம் அவரது உடற்தகுதியை உறுதிப்படுத்தவில்லை. ஷர்துல் தாக்கூர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பியிருப்பதால் மும்பை அணி பலம் பெற்றுள்ளது. இந்த சீசனில் சர்பராஸ் கான் 9 இன்னிங்ஸில் 429 ரன்களை அடித்துள்ளார். 1 சதம், 1 அரைசதம் இதில் அடக்கம். 

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை மட்டுமல்ல.. அதன்பின்னரும் இவர்தான்! CSK வீரருக்கு நிரந்தர ஆப்பு

மேலும் படிக்க | அனுபவம் எல்லாம் தேவை இல்லை! முக்கிய வீரரை கழட்டிவிட இந்தியா முடிவு!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.