T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு – உலகக்கோப்பை முழு விவரம்!

2026 ஆம் ஆண்டிற்கான டி 20 உலகக்கோப்பைத் தொடர் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதுகுறித்த முழுத் தகவல் இங்கே!

ஐசிசி டி20 உலகக்கோப்பை

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 10வது ஐசிசி டி20  உலகக்கோப்பைத் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவுடன் இணைந்து இலங்கை இந்தத் தொடரை நடத்துகிறது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை
ஐசிசி டி20 உலகக்கோப்பை

இந்தியமண்ணில் 2016க்கு பிறகு சரியாக 10 ஆண்டுகள் கழித்தும், இலங்கையில் 2012க்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்தும் நடைபெறும் உலகக்கோப்பை என்பதால், இந்தத் தொடர் கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

பங்கேற்கும் 20 அணிகள்…

மொத்தம் 55 போட்டிகள் கொண்ட இந்தத்  தொடரில், 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற முன்னணி அணிகளுடன், அமெரிக்கா, கனடா, நேபாளம், ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளும் களமிறங்குகின்றன. இந்த உலகக்கோப்பையில் இத்தாலி அணி முதன்முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

ICC T20 World Cup
ICC T20 World Cup

 4 பிரிவுகள் – கடும் போட்டிகள்!

20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் வீதம் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

 குரூப் A: இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, அமெரிக்கா, நெதர்லாந்து

குரூப் B: ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே

குரூப் C: இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்

குரூப் D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, சௌத் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர் 8 முதல் இறுதி வரை…

சூப்பர் 8 சுற்றில் தகுதி பெற்ற 8 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. அந்த குழுவில் உள்ள ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதியில் வெற்றி பெறும் இரண்டு அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 

இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

 ஐசிசி நடத்தும் இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் சூர்யகுமார் யாதவ் ( கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல்( துணை கேப்டன்), ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, ஹர்ஷிப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் ஆகியோர் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று களம் காண இருக்கின்றனர்.

இந்தியாவில் நடைபெறும் போட்டி மைதானங்கள்

மும்பை வான்கடே ஸ்டேடியம், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம், அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம், டெல்லி அருண் ஜெட்லி, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் ஆகிய 5 நகரங்களில் நடைபெற இருக்கிறது.

இறுதிப்போட்டி அகமதாபாத் அல்லது கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அந்தப் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும்.

பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை என்றால், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். 

சேப்பாக்கம் ஸ்டேடியம்
சேப்பாக்கம் ஸ்டேடியம்

இலங்கையில் நடைபெறும் போட்டி மைதானங்கள்

கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியம்,  கொழும்பு சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், கண்டி பாலேகெலே சர்வதேச ஸ்டேடியம் ஆகிய 5 நகரங்களில் நடைபெற இருக்கிறது.

சொந்த மண்ணில் டி20 உலகக்கோப்பை… கனவு நனவாகுமா?

இதுவரை சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற அணி எதுவும் இல்லை என்ற வரலாறு இருப்பதால், கோப்பையை தக்கவைக்க இந்திய அணி இந்த முறை கூடுதல் முனைப்புடன் களமிறங்குகிறது.

இதற்கு முன் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைகளில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் – தலா 1 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.

இந்திய அணி
இந்திய அணி

டி20 உலகக்கோப்பையை எதில் பார்க்கலாம்? 

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோஸ்டார் நிறுவனம் நேரலை வசதிகளை வழங்குகிறது.

தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் அனைத்து போட்டிகளும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

டிஜிட்டல்: ஜியோ ஹாட்ஸ்டார் செயலில் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.