சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 3வது வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4வது வாரமும் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் மாற்றுப் பணியில் குழந்தைகளுக்கு உணவூட்டும் […]