சிதைந்த பென் ஸ்டோக்ஸின் முகம்.. மருத்துவமனையில் சிகிச்சை! என்ன ஆச்சு.. வைரலாகும் போட்டோ

Ben Stokes Latest News: இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் மற்றும் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின்போது அவருக்கு தசைபிடிப்பு ஏற்பட்டது.  இதனால் ஓய்வில் இருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு தான் குணமடைந்தார். இந்த நிலையில், மீண்டும் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

முகத்தில் பலத்த காயம் 

தசை பிடிப்பில் இருந்து மீண்டு வந்த பென் ஸ்டோக்ஸ், மீண்டும் போட்டிகளுக்கு தயாராக பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது பந்து முகத்தில் பட்டு அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவரது வலது கண், கன்னத்தில் நல்ல அடியும், உதட்டில் வெட்டு காயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். 

வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு 

காயம் தீவிரமாக இருந்தபோதிலும், பென் ஸ்டோக்ஸ் இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவரது இன்ஸ்டாகிராமில், புகைப்படத்துடன் கூடிய ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நீங்கள் பந்தின் நிலையை பார்க்க வேண்டும் என எழுதி சிரிக்கும் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பென் ஸ்டோக்ஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் விரைவில் உங்களை களத்தில் பார்க்க காத்திருக்கிறேன் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

விரைவில் மீண்டு வருவார்

பென் ஸ்டோக்ஸ் தற்போது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் வென்று ஆஷஸ் தொடரை தக்கவைத்துக்கொண்டது.  

இதையடுத்து இங்கிலாந்து அணி வரும் ஜூன் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. தற்போது காயத்தால் அவதியில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ் இதில் இருந்து விரைவில் மீண்டு நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ்

34 வயதாகும் பென் ஸ்டோக்ஸ், இதுவரை 120 டெஸ் போட்டிகளில் விளையாடி 7216 ரன்கள் குவித்துள்ளார். இதில் 14 சதங்களும் 37 அரைசதங்களும் அடங்கும். பந்து வீச்சில் 245 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி உள்ளார். 114 ஒருநாள் போட்டிகளில் அவர், 3463 ரன்கள் குவித்து 74 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 24 அரைசதங்கள் அடங்கும். 43 டி20 போட்டிகளில் 585 ரன்கள் எடுத்து 26 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்த வடிவில் ஒரே ஒரு அரைசதம் மட்டும் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.