Josh Hazlewood Ruled Out: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் நாளை (பிப். 7) தொடங்குகிறது. அடுத்த மாதம் 8ஆம் தேதிவரை இத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களிலும்; இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டி நகரங்களிலும் நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
ICC T20 World Cup 2026: நான்கு பிரிவுகள்
மொத்தம் 20 அணிகள் இத்தொடரின் குரூப் சுற்றில் விளையாட உள்ளன. அதில் 4 குரூப்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏ குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன. பி குரூப்பில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஓமன், ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றுள்ளன. சி குரூப்பில் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம் அணிகள் உள்ளன. டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அணிகள் இடம்பெற்றுள்ளன.
ICC T20 World Cup 2026: ஆஸ்திரேலியா அரையிறுதி கூட போகாது…
இதில் ஒவ்வொரு நாளும் காலை 11 மணி, பிற்பகல் 3 மணி, இரவு 7 மணி என மூன்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஒரு சில நாள்களில் மட்டும் ஓரிரு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளில் இருந்துதான் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் என வல்லுநர்கள் தங்களின் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியா இம்முறை அரையிறுதி வராது என்றும் தெரிவிக்கின்றனர். 2021 டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி கடந்த முறை அரையிறுதிக்கு கூட தகுதிபெறவில்லை.
ICC T20 World Cup 2026: ஸ்டார்க், கம்மின்ஸ் கிடையாது
அந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டி20ஐ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் பந்துவீச்சில் பெரிய அனுபவம் இல்லை என்றும் ஸ்குவாடில் இடம்பெற்றுள்ள ஜோஷ் ஹேசில்வுட் மட்டுமே நம்பிக்கை அளிப்பார் என்றும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் ஹேசில்வுட் காயம் காரணமாக முதற்கட்ட போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
ICC T20 World Cup 2026: ஹேசில்வுட் விலகல்
இந்நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக முழுவதுமாக விலகப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தசைநார் காயம் காரணமாக அவர் முழு உடற்தகுதியை பெறவில்லை என்பதாலும், அவரை ஸ்குவாடில் சேர்த்து ரிஸ்கை அதிகப்படுத்த வேண்டாம் என்பதால் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டார்க் – கம்மின்ஸ் – ஹேசில்வுட் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி ஒரு ஐசிசி தொடரை விளையாட இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலிய அணி பென் டுவார்ஷுயிஸ், சேவியர் பார்ட்லெட் மற்றும் சீன் அபோட் ஆகியோரையே பெரிதும் நம்பியிருக்கிறது. ஹேசில்வுட் 59 டி20ஐ இன்னிங்ஸில் மோதி 79 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். அவரின் சராசரி 21.26, ஸ்ட்ரைக் ரேட் 7.47 ஆகவும் உள்ளது.
IPL 2026: கண்ணீர் கடலில் RCB ரசிகர்கள்
ஜாஷ் ஹேசில்வுட் ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2025 சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஹேசில்வுட்தான். அவரது அனுபவமிக்க பந்துவீச்சுதான் பல சமயங்களில் ஆர்சிபி அணியை கரை சேர்த்திருந்தது. கடந்த சீசனில் மட்டும் அவர் 12 போட்டிகளில் 22 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். நேற்று WPL தொடரில் ஆர்சிபி மகளிர் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதால் அந்த அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த நிலையில், தற்போது ஹேசில்வுட் டி20 உலகக் கோப்பை தொடரில் விலகியிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை ஹேசில்வுட் காயத்தில் இருந்து மீளாவிட்டால் அவர் ஐபிஎல் தொடரையும் தவறவிடக்கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளது.
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டி விவரம்.. முழு அட்டவணை! எதில் பார்க்கலாம்?
மேலும் படிக்க | சிதைந்த பென் ஸ்டோக்ஸின் முகம்.. மருத்துவமனியில் சிகிச்சை! என்ன ஆச்சு.. வைரலாகும் போட்டோ
மேலும் படிக்க | IND vs USA: இந்தியா பிளேயிங் 11.. முக்கிய பவுலர் காயம்! சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்கா?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More