ஹர்ஷித் ராணா விலகல்… முகமது சிராஜை இந்திய அணி தேர்வு செய்தது ஏன் தெரியுமா?

Mohammed Siraj Replacing Harshit Rana: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் நாளை (பிப். 6) தொடங்குகிறது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி அதன் முதல் போட்டியில் அமெரிக்கா அணியுடன் மோத உள்ளது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

Add Zee News as a Preferred Source

ICC T20 World Cup 2026: இந்திய அணியின் போட்டிகள் 

நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. நாளைய போட்டிக்கு பின், வரும் பிப். 12ஆம் தேதி நமீபியா அணியுடனும், பிப். 15ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், பிப். 18ஆம் தேதி நெதர்லாந்து அணியுடனும் இந்திய அணி மோத இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மட்டும் கொழும்புவில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி அப்போட்டியை புறக்கணிப்பதாக தெரிவித்திருக்கிறது.

ICC T20 World Cup 2026: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

ஆனால், இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அப்போட்டியின் டாஸ் வரை செல்லும். போட்டி நடைபெறும் தினத்தன்று பாகிஸ்தான் அணி விளையாட மறுக்கும்பட்சத்தில், போட்டி நடுவர் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிப்பார். ஆட்டத்தை விளையாடாமலே இந்திய அணி 2 புள்ளிகளை பெறும், பாகிஸ்தானுக்கு புள்ளிகள் மட்டுமின்றி பல கோடிகள் வரை இழப்பு ஏற்படலாம். ஐசிசி உள்பட பல்வேறு தரப்பின் அதிருப்திக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளாகும்.

ICC T20 World Cup 2026: சூப்பர் 8இல் இந்தியாவின் போட்டிகள்

இந்தச் சூழலில், இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றால் உத்தேசமாக தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராகவே விளையாடும். சூப்பர் 8 சுற்றில் இருந்து ஒவ்வொரு போட்டியும் இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல அதிமுக்கிய போட்டிகளாக மாறும். அந்தச் சூழலில், இந்திய அணி ஸ்குவாட் பலமாக இருப்பது அவசியமாகும். தற்போதைய சூழலில் திலக் வர்மா காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருப்பது பெரும் ஆறுதலாய் இருந்தாலும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவது சிறு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

Harshit Rana Injury: ஹர்ஷித் ராணாவுக்கு காயம் 

வாஷிங்டன் சுந்தர் தொடர்ச்சியாக உடற்தகுதியை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் முதற்கட்ட போட்டிகளை தவறவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் நவி மும்பையில் நடந்த பயிற்சி போட்டியின் போது இந்திய வீரர் ஹர்ஷித் ராணாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரும் ஒரு ஓவரை மட்டும் வீசிவிட்டு களத்தில் இருந்து அன்று வெளியேறினார். இந்திய ஸ்குவாடில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவருக்கும் ஹர்ஷித் ராணா பேக்-அப் பந்துவீச்சாளராக உள்ளார்.

Harshit Rana Injury: வேகப்பந்துவீச்சு பேக்-அப் தேவை…

ஒரு சில முக்கியமற்ற போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் அல்லது பும்ரா ஆகியோருக்கு நிச்சயம் ஓய்வு தேவைப்படும். ஹர்திக் பாண்டியா, தூபே ஆகியோர் இருந்தாலும் நான்கு ஓவர்களை வீசக்கூடிய தனி வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு தேவைப்படும். இந்தச் சூழலில், ஹர்ஷித் ராணா காயத்தால் அவதிப்பட்டு வருவதாலும், அவரால் உடற்தகுதியை மீட்டெடுக்க இயலாது என்பதாலும் இந்திய அணி வேறு வேகப்பந்துவீச்சு ஆப்ஷனை எடுக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

Mohammed Siraj: ஹர்ஷித் ராணாவுக்கு பதில் முகமது சிராஜ்…

இந்நிலையில், ஹர்ஷித் ராணா காயம் காரணமாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாகவும், அவருக்கு பதில் இந்திய அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்படுவதாகவும் பிசிசிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முகமது சிராஜ் கடந்த முறை 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய ஸ்குவாடில் இடம்பெறிருந்தார். இவர் மொத்தம் 16 டி20ஐ போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டை எடுத்துள்ளார். கடந்த ஐபிஎல் 2025 சீசனில் குஜராத் அணிக்காக விளையாடி 15 போட்டிகளில் 16 விக்கெட்டை சிராஜ் எடுத்திருந்தார், மொத்தமாக ஐபிஎல் தொடரில் இவர் 108 போட்டிகளில் விளையாடி 109 விக்கெட்டை எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக டி20 அரங்கில் 159 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டை எடுத்துள்ளார்.

Harshit Rana ruled out of ICC Men’s T20 World Cup 2026, Mohd. Siraj named as replacement.

Details | #TeamIndia | #MenInBlue | #T20WorldCup https://t.co/Ml6TxXELgP

— BCCI (@BCCI) February 6, 2026

Mohammed Siraj: ஏன் முகமது சிராஜ் சரியான தேர்வு?

அர்ஷ்தீப் சிங் பெரும்பாலும் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். பும்ராவுக்கே அதிக ஓய்வு தேவைப்படும். அந்தச் சூழலில், புதிய பந்தை கையாளவும், டெத் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தவும் அனுபவம் நிறைந்த வேகப்பந்துவீச்சாளர் தேவை. பிரசித் கிருஷ்ணா அதிக ரன்களை வாரி வழங்கி வருகிறார் என்பதாலும் அவரது சமீபத்திய பார்ம் பெரியளவில் கவரும் வகையில் இல்லை என்பதாலும் சிராஜிற்கு வாய்ப்பு வழங்க அதிக வாய்ப்புள்ளது. சிராஜ் பவர்பிளேவில் 2-3 ஓவர்களை வீசினால் நிச்சயம் அது சூர்யகுமாருக்கு போதுமானதாக இருக்கும். 

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டி விவரம்.. முழு அட்டவணை! எதில் பார்க்கலாம்?

மேலும் படிக்க | IND vs USA: இந்தியா பிளேயிங் 11.. முக்கிய பவுலர் காயம்! சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்கா?

மேலும் படிக்க | ஹர்ஷித் ராணாவுக்கு காயம்… இந்திய அணி குறிவைக்கும் 3 பௌலர்கள் – CSK வீரரும் இருக்காரு!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.