15 சிக்ஸ்… 15 பவுண்டரி… சூர்யவன்ஷி 175 ரன்கள் – தூள் தூளான சாதனைகள்

Vaibhav Suryavanshi, IND U19 Team: ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் (ICC U19 World Cup Final 2026) கடந்த ஜனவரி 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணி இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரை கடைசியாக 1998ஆம் ஆண்டில் வென்றது. 27 ஆண்டுகளுக்கு பின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இங்கிலாந்து தற்போது குறிவைத்திருக்கிறது.

Add Zee News as a Preferred Source

ICC U19 World Cup Final 2026: சூர்யவன்ஷி 175 ரன்கள்

இன்றைய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஓபனரில் ஒருவரான ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே 53 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். இந்நிலையில், இந்திய அணியின் மற்றொரு அதிரடி ஓபனரான 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை குவித்து இங்கிலாந்து அணியை மிரள வைத்தார். 80 பந்துகளில் 15 பவுண்டரி, 15 சிக்ஸரை பறக்கவிட்டு சூர்யவன்ஷி 175 ரன்களை குவித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 218.75 ஆகும்.

A marathon knock by Vaibhav Sooryavanshi on a grand stage

India U19 283/3 after 30 overs.

Updates https://t.co/hisult7mtv #U19WorldCup pic.twitter.com/NL2r2ux1lT

— BCCI (@BCCI) February 6, 2026

ICC U19 World Cup Final 2026: இந்தியா 400 ரன்களை அடிக்க வாய்ப்பு

சூர்யவன்ஷி ஆட்டமிழக்கும்போது 25.3 ஓவர்களில் இந்தியக அணி 3 விக்கெட்டை இழந்து 251 ரன்களை எடுத்துள்ளகது. ஒருவேளை இந்திய அணி 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்தால் நிச்சயம் 350 – 400 ரன்களை குவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப்போட்டியில் 300 ரன்களே பெரிய அழுத்தத்தை உருவாக்கும் என்ற நிலையில், 350 ரன்களுக்கு மேல் அடிப்பது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு மன ரீதியான பின்னடைவை ஏற்படுத்தும். இந்திய அணி பந்துவீச்சும் சிறப்பாக இருப்பதால் எவ்வித அழுத்தமும் இன்றி இந்தியா 6வது முறையாக கோப்பையை வெல்லலாம்.

ICC U19 World Cup Final 2026: முதலிடத்தில் சூர்யவன்ஷி

மேலும், நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி 7 இன்னிங்ஸில் 439 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் தற்போது இங்கிலாந்து வீரர் பென் மேயஸ் 6 இன்னிங்ஸில் 399 ரன்களை மூன்றாவது இடத்தில் உள்ளார். ஒருவேளை 2வது இன்னிங்ஸில் அவர் 41 ரன்களை அடிக்கும்பட்சத்தில் இந்த பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷியை மேயஸ் முந்த வாய்ப்புள்ளது.

ICC U19 World Cup 2026: வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சூர்யவன்ஷி 2வது இடத்திற்கு முன்னேறினார். இன்றைய போட்டியில் 55 பந்துகளில் சதத்தை அடித்து சூர்யவன்ஷி இந்த சாதனையை செய்துள்ளார், ஆஸ்திரேலிய வீரர் வில் மலாஜ்சுக் என்பவர் 51 பந்துகளில் ஜப்பான் அணிக்கு எதிராக  சதம் அடித்தே இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

அதேபோல், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அதிக ரன்களை அடித்தவர்கள் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். இந்த பட்டியலில் உன்முக்த் சந்த் 111 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி 30 சிக்ஸர்களுடன் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியில்ல 18 சிக்ஸர்களுடன் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

ICC U19 World Cup Final 2026: கவனிக்க வேண்டிய 4 வீரர்கள்

மேலும், டி20 உலகக் கோப்பையில் இலங்கை வீரர் விரான் சாமுதிதா 192 ரன்களை குவித்ததே இதுவரை அதிகபட்ச தனிநபர ரன்களாக இருந்து வருகிறது. ஒருவேளை இன்று சூர்யவன்ஷி 18 ரன்களை கூடுதலாக அடித்திருந்தால் இந்த சாதனையும் முறிந்திருக்கும்.  இத்தொடரை வெல்லும் அணிக்கு ஐசிசி எவ்வித தனி பரிசுத்தொகையை வழங்காது என்றாலும், அடுத்து சீனியர் அணிக்கு விளையாடுவதற்கு இத்தொடர் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். இத்தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, விஹான் மல்கோத்ரா, ஆரோன் ஜார்ஜ் உள்ளிட்டோர் நிச்சயம் எதிர்கால இந்திய கிரிக்கெட் நட்சத்திரமாக உருவெடுப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டி விவரம்.. முழு அட்டவணை! எதில் பார்க்கலாம்?

மேலும் படிக்க | IND vs USA: இந்தியா பிளேயிங் 11.. முக்கிய பவுலர் காயம்! சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்கா?

மேலும் படிக்க | இந்திய அணிக்கு பின்னடைவு.. காயத்தால் முக்கிய பவுலர் விலகல்.. அவருக்கு பதில் யார்?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.