Vijay: `அவர்கள் அப்படித்தான்' – தவெக விழா குறித்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்ன திருமா

பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் பரபரப்பாகப் பேசப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், பா.ஜ.க-வையும் அதில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், அது குறித்து வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் பேசியது புரியவே இல்லை. அதனால்தான் கோவை மக்கள் அவரைத் திருப்பி அனுப்பினார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தகைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டுகிறேன் என்ற பெயரில் ஒரு உரையாற்றியபோது ‘பிச்சை எடுப்பதற்குக் கூட பயன்படாத மொழி தமிழ்’ என்று தனது காழ்ப்புணர்வைக் கட்டியிருக்கிறார். இதுதான் பா.ஜ.க-வைச் சார்ந்தவர்களின் மனநிலை.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒரு மனநிலையைக் கொண்டவர்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர் மக்கள் நீதி மையத்தின் நிறுவனர் கமல் ஹாசன், இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

அவருக்கு வி.சி.க சார்பில் எனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். வானதி சீனிவாசன் கமல்ஹாசன் பேசியது புரியவே இல்லை என விமர்சித்திருக்கிறார்.

தமிழினமே கமல்ஹாசனைப் பாராட்டியதால் பா.ஜ.க-வினர் அந்த வயிற்றெரிச்சலில் பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் எங்கள் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்படும். த.வெ.க மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் நடனமாடியது குறித்தோ, பாடகர் வேல்முருகன் பாடியது குறித்தோ கருத்து கூறுவதற்கு எதுவும் இல்லை. அவர்கள் அப்படித்தான்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.