அமெரிக்கா அமர்களம்… தடுமாறிய இந்தியா… கரையேற்றிவிட்ட சூர்யகுமார் – டார்கெட் 162

India vs USA Match Updates: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் (ICC T20 World Cup 2026) இன்று தொடங்கியது. இந்தியா மற்றும் இலங்கையின் 7 நகரங்களில் நடைபெறும் இத்தொடர் மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

ICC T20 World Cup 2026: அதிரடி காட்டிய கத்துக்குட்டிகள்

இன்று கொழும்புவில் நடந்த முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றது. நெதர்லாந்து அணி பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி அளித்திருந்த நிலையில், கடைசி கட்டத்தில் அதன் சொதப்பலான பந்துவீச்சால் பாகிஸ்தான் வென்றது. அதைப் போல், 2வது லீக் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வென்றது. ஸ்காட்லாந்து ஒரு கட்டத்தில் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்தாலும், ரொமாரியோ ஷெப்பர்ட் ஹோட்ரிக் உள்பட 5 விக்கெட்டை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

நெதர்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட கத்துக்குட்டி அணிகள் இன்று தோல்வியடைந்தாலும் கூட, அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்மூலம், டி20 உலகக் கோப்பை தொடர் குரூப் சுற்றில் இருந்தே விறுவிறுப்பை பெற்றிருக்கிறது. எந்த அணி வேண்டுமானாலும் எந்தச் சூழலில் வேண்டுமானாலும் பெரிய அணிகளை தோற்கடிக்கலாம் என்பது தெளிவாகி உள்ளது. இனி கத்துக்குட்டி அணிகள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது போல…

IND vs USA: அமெரிக்காவின் அதிரடி பௌலிங்

அதேபோல், இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதின. இதில் நடப்பு சாம்பியன் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே அமெரிக்க அணி தடுமாறச் செய்துள்ளது. இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 161 ரன்களை எடுத்தது. பவர்பிளேவில் இந்திய அணி 46 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்டை இழந்து தடுமாறியது. 

A captain’s knock from @surya_14kumar when it mattered mos
Scorecarhttps://t.co/Rlm2ARPnOV#TeamIndia | #MenInBlue | #T20WorldCup | #INDvUSA pic.twitter.com/eTTGi6fnpb

— BCCI (@BCCI) February 7, 2026

IND vs USA: சூர்யகுமார் 84 ரன்கள்

இதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் 84 ரன்களை அடித்துள்ளார். திலக் வர்மா 25, இஷான் கிஷன் 20, அக்சர் பட்டேல் 14 மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை அடித்தனர். அபிஷேக் சர்மா 0, சிவம் தூபே 0, ரிங்கு சிங் 6, ஹர்திக் பாண்டியா 5, அர்ஷ்தீப் சிங் 4 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அமெரிக்க பந்துவீச்சில் வான் ஷால்க்விக் 4 ஓவர்களில் 25 ரன்களை எடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றினார். ஹர்மீத் சிங் 4 ஓவர்களில் 26 ரன்களை எடுத்து 2 விக்கெட்டை எடுத்தார்.

மேலும் படிக்க | உற்றுநோக்க வேண்டிய 5 இளம் வீரர்கள்… டி20 உலகக் கோப்பை – ஓர் பார்வை!

மேலும் படிக்க | ஹர்ஷித் ராணா விலகல்… முகமது சிராஜை இந்திய அணி தேர்வு செய்தது ஏன் தெரியுமா?

மேலும் படிக்க | U19 உலகக் கோப்பை: இந்திய அணி சாம்பியன்… 6வது கப் – CSKக்கு அடுத்த கேப்டன் கிடைச்சாச்சு!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.