அருணாச்சலப் பிரதேசம்: இருசக்கர வாகனத்தில் சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்; 'புலி' அச்சத்தில் மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். ஆனால் அங்கு காவலர் ஒருவரை புலி ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோவர் திபாங்க் மாவட்டத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் சிக்செங்க் மான்புங் என்பவர் திபாங்க் பள்ளத்தாக்கில் அனினி என்ற இடத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் அவரது வாகனத்தை வழிமறித்த புலி ஒன்று தலைமைக் காவலரைத் தாக்கியது. இதில் புலி அவரைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டது. அவரைக் கடித்துத் தின்றுவிட்டு புலி காட்டுக்குள் சென்றுவிட்டது.

இது குறித்து கேள்விப்பட்டதும் வனத்துறையினரும், போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து காவலரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புலி
புலி

சம்பவம் நடந்த மயூடியா பகுதியில் ஏற்கனவே பல முறை பொதுமக்கள் புலிகளின் நடமாட்டத்தைக் கண்டதாகத் தெரிவித்துள்ளனர். எனவே அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரி மிதோ ருமி கூறுகையில், ”இப்பகுதியில் ஒரு புலியும், அதன் மூன்று குட்டிகளும் தென்படுவதை இரவு நேரங்களில் பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

அப்புலிகளைப் பத்திரமாகப் பிடித்து வேறு இடத்தில் கொண்டு போய்விட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புலிகள் சரணாலயத்தில் இருந்து ஊழியர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.