சென்னை: தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் “தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக […]