India vs USA Tamil Commentary Scorecard Live: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் (ICC T20 World Cup 2026) இன்று தொடங்கியது. சுமார் ஒரு மாதம் நடைபெற இருக்கும் இந்த டி20ஐ திருவிழாவில் இன்று மட்டும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.
Add Zee News as a Preferred Source
India vs USA Live Scorecard: இந்தியா – அமெரிக்கா மோதல்
கொழும்புவில் உள்ள எஸ்எஸ்சி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகள் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ தொடக்க விழா நிகழ்ச்சியும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இன்று மும்பையில் நடைபெறுகிறது.
India vs USA Live Scorecard: கவனிக்க வேண்டிய அமெரிக்க வீரர்கள்
அமெரிக்க அணி கடந்த டி20 உலகக் கோப்பை குரூப் சுற்றில் பாகிஸ்தானை அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்று வரை முன்னேறியது. ஆனால் சூப்பர் 8 சுற்றில் 3 போட்டிகளையும் தோற்று வெளியேறியது. தொடர்ச்சியாக அமெரிக்க அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாடி கவனம் பெற்றுள்ளனர். கேப்டன் மோனக் பட்டேல், இடது கை வேகப்பந்துவீச்சாளர் சௌரப் நேத்ராவல்கர், சைதேஜா முக்கமல்லா, ஷெஹான் ஜெயசூர்யா, ஆண்ட்ரிஸ் கௌஸ், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அமெரிக்க வீரர்கள் கவனம் பெறுகிறார்கள்.
India vs USA Live Scorecard: உள்ளே வரும் சிராஜ்
குரூப் சுற்றில் இந்திய அணி அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை முறையே சந்திக்கின்றன. இதில் அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பும்ரா இல்லாத இடத்தில் முகமது சிராஜிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விலகிய நிலையில், சிராஜ் நேற்று அணியுடன் இணைந்தார்.
India vs USA Free Live Scorecard: இந்திய அணியின் காம்பினேஷன்
ஆனால், சஞ்சு சாம்சனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் விதமாக அவரே ஓபனிங் இறங்கவும் வாய்ப்புள்ளது. இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோரும் மிடில் ஆர்டரில் விளையாட வாய்ப்புள்ளது. இதனால், இந்திய அணி 9 பேட்டர்கள், 2 பிரீமியம் பௌலர்கள் உடன் களமிறங்க வாய்ப்புள்ளது. பந்துவீச்சு ஆப்ஷனாக அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே ஆகியோர் இருக்கிறார்கள். அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோரும் பந்துவீசுவார்கள் என்பதால் தயங்காமல் இந்திய அணி இந்த காம்பினேஷன் உடன் களமிறங்கலாம்.
India vs USA Live Scorecard: பிளேயிங் லெவன்
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.
India vs USA Live Scorecard: நேரலையில் பார்க்க…
இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதும் இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், இதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் நேரலையில் பார்க்கலாம். அதேநேரத்தில், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கவும், தொலைக்காட்சி சேனலில் பார்க்கவும் நீங்கள் சந்தா செலுத்தியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
India vs USA Live Scorecard: தமிழ் கமெண்ட்ரி உடன் ஸ்கோர்கார்ட்
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் டி20 உலகக் கோப்பை நேரலை ஸ்கோர்கார்டை, தமிழ் வர்ணனையுடன் இலவசமாக பார்க்க உங்களின் Zee Tamil News சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதாவது போட்டியின் நேரலை காட்சிகளை நீங்கள் பார்க்க முடியாவிட்டாலும், ஒவ்வொரு பந்துகளின் அப்டேட்டையும் நீங்கள் ஸ்கார்கார்டில் பார்க்கலாம். மேலும், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் சிறப்பான வர்ணனையில் போட்டியின் நிலவரத்தையும், கிரிக்கெட் நுணுக்கங்களையும் நீங்கள் தமிழிலேயே அறிந்துகொள்ளலாம்.
தமிழ் வர்ணனை உடன் கூடிய ஸ்கோர்கார்ட் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்து இந்தியா போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். இதனை நீங்கள் Zee Tamil News ஊடகத்தின் பேஸ்புக், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் தளங்களில் நேரலையில் பார்க்கலாம். போட்டியின் ஸ்கோர்கார்ட் நேரலையில் வந்த உடன் அந்த லிங்க் இப்பக்கத்தில் இணைக்கப்படும்.
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டி விவரம்.. முழு அட்டவணை! எதில் பார்க்கலாம்?
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை மட்டுமல்ல.. அதன்பின்னரும் இவர்தான்! CSK வீரருக்கு நிரந்தர ஆப்பு
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஒரே ஒரு கவலை இதுதான்.. தோனி அறிவுரை!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More