இந்திய அணிக்கு வரும் முக்கிய வீரர்.. நமீபியா போட்டியில் நடக்கும் மாற்றம்! முழு விவரம்

T20 World Cup Latest News: டி20 உலக் கோப்பை தொடர் நேற்று (பிப்ரவரி 08) தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. நேற்று (பிப்ரவரி 08) தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி அமெரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி 161 ரன்களை மட்டுமே குவித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

Add Zee News as a Preferred Source

Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவ் முக்கிய அப்டேட் 

தற்போது இந்திய அணி நமீபியா அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இப்போட்டி வரும் பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு முக்கிய தகவலை கொடுத்துள்ளார். அதாவது, முக்கிய ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் நமீபியா போட்டிக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைய உள்ளார் என தெரிவித்துள்ளார். 

Washington Sundar Injury Update: நியூசிலாந்து தொடரில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தர் 

சமீப காலமாக இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் வாஷிங்ட சுந்தர். இவரது பங்கானது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. இவர் ஜனவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, காயம் காரணமாக வெளியேறினார். அதன் காரணமாக ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடரை தவர விட்டார். 

India vs Namibia Washington Sundar: நிபிபியா போட்டிக்கு முன் இந்திய் ஆணிக்கு திரும்பும் வாஷிங்டன் சுந்தர் 

தொடர்ந்து ஓய்வில் இருந்த அவர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது வரை இணையவில்லை. இதனால் அமெரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியை அவர் தவரவிட்டார். இந்த நிலையில், நேற்று அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் வென்றதை அடுத்து சூரியகுமார் யாதவ் பேசியபோது, வாஷிங்டன் சுந்தர் நமீபியா போட்டிக்கு முன்பாக இந்திய அணியுடன் திரும்புவார் என கூறி உள்ளார். 

Suryakumar Yadav About Washington Sundar: வாஷிங்டன் சுந்தர் நன்றாக உள்ளார்

இது தொடர்பாக பேசிய அவர், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் சற்று தடுமாறினோம். இருப்பினும் வரும் போட்டிகளில் நாங்கள் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவோம். வாஷிங்டன் சுந்தர் டெல்லியில் எங்களுடன் இணைகிறார். அவர் நன்றாக உள்ளார் என கூறினார். 

காயத்தில் இருந்து மீண்ட வாஷிங்டன் சுந்தர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டு உள்ளார். அவர் இன்று மாலை டெல்லி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது அணிக்கு கூடுதல் பலம் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் வரும் போட்டிகளில் அவர் இந்திய அணியின் பிளேயிங் 11ல் இருப்பாரா என்பது சந்தேகமாகி உள்ளது. 

India Playing XI: பிளேயிங் 11ல் பெரிய மாற்றம் இருக்காது 

இந்திய அணியின் பிளேயிங் 11ல் வரும் போட்டிகளில் பெரிதாக மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இடம் பிடித்த வீரர்களே தொடர்ந்து இடம்பெறுவர் என எதிர்பார்க்கபடுகிறது. முக்கிய போட்டியில் மட்டும் ஜஸ்பிரித் பும்ரா அணிக்குள் வருவார். அவர் சிராஜுக்கு பதிலாக எடுக்கப்படுவார் என தெரிகிறது. 

India Squad For T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி 

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங். 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.