சந்தோஷத்தில் CSK… பிளேயிங் லெவனில் இந்த வீரருக்கு இடம் உறுதி… பலமாகும் பந்துவீச்சு!

Chennai Super Kings, IPL 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2026) தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் இத்தொடர் நேற்று (பிப். 7) தொடங்கிய நிலையில், மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 

Add Zee News as a Preferred Source

இரண்டாம் நாளான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் (NZ vs AFG) மோதும் போட்டி காலை 11 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது.

NZ vs AFG: 183 ரன்கள் டார்கெட்

அதிகபட்சமாக குல்புதீன் நயிப் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 63 ரன்களை குவித்தார். செடிகுல்லா அடல் 29, ரஹ்மானுல்லா குர்பாஸ் 27, தர்வீஷ் ரசூலி 20 ரன்களை எடுத்து ஆறுதல் அளித்தனர். ஆப்கானிஸ்தான் அணி இதுவரை டி20ஐ போட்டிகளில் முதலில் பேட்டிங் 24 முறை 180 ரன்களுக்கு அடித்து ஒருமுறை கூட தோற்றதில்லை. அதேபோல், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணி இதுவரை 170 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக சேஸ் செய்ததே இல்லையாம். தற்போது நியூசிலாந்து அணி 183 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வருகிறது.

Chennai Super Kings: குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்

கடுமையான மதிய வெயிலிலும் சென்னை சேப்பாக்கத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இப்போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். நியூசிலாந்து வெற்றி பெறுமா அல்லது ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுமா என எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்க, இப்போட்டியால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தற்போது படுகுஷியில் இருக்கின்றனர். அதற்கு காரணம் வேறு யாரும் இல்லை, சிஎஸ்கே அணிக்கு தேர்வாகியிருக்கும் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றிதான்.

Chennai Super Kings: மிரட்டும் மேட் ஹென்றி 

மேட் ஹென்றியை சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் ரூ.2 கோடிக்கு தூக்கியிருக்கிறது. இந்திய அணிக்கு எதிரான தொடரில் மேட் ஹென்றி பெரியளவில் சோபிக்கவில்லை. ஜாக் ஃபவுல்க்ஸ் கூட மோசமான பந்துவீச்சையே வெளிக்காட்டியிருந்தார். ஆனால், தற்போது டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு மேட் ஹென்றி தனது ரிதமை பிடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். 

டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் நியூசிலாந்து – அமெரிக்கா அணிகள் நவி மும்பையில் மோதின. அந்த போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கில், அமெரிக்கா 201 ரன்களை குவித்தது. 7 ரன்கள் வித்தியாசத்தில்தான் நியூசிலாந்து அந்த போட்டியை வென்றது. அந்த போட்டியிலும் மேட் ஹென்றி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அன்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெறவும் முக்கிய வீரராக இருந்தார். இன்றைய போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். அதுவும் இன்று சென்னை சேப்பாக்கத்தில் சிறப்பாக வீசியிருப்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

இவர் ஒருவேளை, டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனலாம். நியூசிலாந்து அணி இன்னும் அதன் இரண்டு குரூப் சுற்று போட்டிகளை சென்னை சேப்பாக்கத்தில்தான் விளையாட உள்ளது. அதிலும் மேட் ஹென்றி உற்றுநோக்கப்படுவார். ஆனால் நியூசிலாந்து அணி பகலில் மட்டுமே போட்டிகளில் விளையாடுகிறது என்பதை கவனிக்க வேண்டும். 

Chennai Super Kings: சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி
 
மேட் ஹென்றி சிறப்பாக விளையாடினால் சிஎஸ்கே டெவால்ட் பிரெவிஸ் – நூர் அகமது – நாதன் எல்லீஸ்/அகேல் ஹொசைன், மேட் ஹென்றி என்ற காம்பினேஷனில் செல்லலாம். நாதன் எல்லீஸ், மேட் ஹென்றி இருவருமே டெத் மற்றும் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசுவார்கள். மிடில் ஓவரிலும் ஹென்றி பயன்படுவார். கலீல் அகமது டெத் ஓவர்களில் பெரிதாக கைக்கொடுக்க மாட்டார் என்பதாலும், மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளரை டெத் ஓவர்களில் நம்ப இயலாது என்பதால் டெத் ஓவர்களுக்காக நாதன் எல்லீஸ் மற்றும் மேட் ஹென்றி இவரையும் சிஎஸ்கே அணி விளையாட வைக்கலாம். மிடில் ஓவரில் தூபேவும் பந்துவீசினால் சிஎஸ்கேவுக்கு சிக்கலே இருக்காது. மேட் ஹென்றியின் சிறப்பான பார்ம், சிஎஸ்கேவின் பந்துவீச்சுக்கு நிச்சயம் பலம் சேர்க்கும். 

மேலும் படிக்க | இந்திய அணிக்கு வரும் முக்கிய வீரர்.. நமீபியா போட்டியில் நடக்கும் மாற்றம்! முழு விவரம்

மேலும் படிக்க | ஹர்ஷித் ராணாவிற்கு பதில் சிராஜ் எப்படி வந்தார்? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்!

மேலும் படிக்க | இந்திய அணியில் விளையாட தடை? என்ன செய்வார் வைபவ் சூர்யவன்ஷி?
 

 

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.