ICC T20 World Cup 2026, ENG vs NEP: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியில் இருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
ICC T20 World Cup 2026: கதறவிடும் கத்துக்குட்டிகள்
நேற்று கொழும்புவில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி கடுமையாக போராடிதான் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது. நேற்று மதியம் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் கூட ஸ்காட்லாந்து அணி சேஸிங்கில் மேற்கு இந்திய தீவுகளை சற்று கதிகலங்க செய்தது. ஆனால், ரொமாரியோ ஷெப்பர்ட் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டால் 35 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் வெற்றிபெற்றது.
அதேபோல், நேற்றிரவு மும்பையில் நடந்த போட்டியில் கூட இந்திய அணியை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அமெரிக்க அணி ஆட்டம் காண்பித்தது. போராடி 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இன்று ஆப்கானிஸ்தான் அணியும் கூட ஓரளவுக்கு நியூசிலாந்தை பேட்டிங்கில் பதம்பார்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். கத்துக்குட்டி அணிகள் அனைத்து போட்டியிலும் தோற்றிருந்தாலும் கூட, அனைத்து போட்டிகளையும் சுவாரஸ்யமான ஒன்றாக மாற்றியிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
ENG vs NEP: பந்துவீச்சில் நேபாளம் சிறப்பு
அந்த வகையில், இன்று மதியம் மும்பையில் தொடங்கிய இங்கிலாந்து – நேபாளம் போட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கிலாந்து அணி பேட்டிங்கிலும் பெரியளவில் அடிவாங்கியது. ஆனால் பெத்தெல் 55, புரூக் 53, ஜேக்ஸ் 39*, பட்லர் 26 ரன்களை எடுத்து மொத்தம் 184 ரன்களை எடுத்தது. நேபாளம் பந்துவீச்சாளர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஐரி, நந்தன் யாதவ் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். கடைசி மூன்று ஓவர்களில் 45 ரன்களை கொடுத்தது மட்டுமே சற்று பின்னடைவை கொடுத்தது.
ENG vs NEP: பேட்டிங்கும் மிரட்டல்
நேபாளம் அணி பந்துவீச்சை விட பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பியது. பவர்பிளேவில் சிறப்பாக விளையாடி 2 விக்கெட்டை மட்டும் வீழ்த்தி 47 ரன்களை அடித்தது. ஆர்ச்சரின் ஓவரில் 14 ரன்களை அடித்து புர்டெல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஹித் பவுடல் – ஐரி ஜோடி 54 பந்துகளில் 82 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். ஐரி 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரோஹித் பவுடல் 39, ஆரிஃப் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், லோகேஷ் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினார். ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரில் 22 ரன்கள், லுக் வுட் வீசிய 19வது ஓவரில் 14 ரன்கள் அடிக்கப்பட்டது.
ENG vs NEP: சாம் கர்ரணின் சாமர்த்தியமான பந்துவீச்சு
இதனால், கடைசி ஓவருக்கு 10 ரன்களே தேவைப்பட்டது. கடைசி ஓவரை சாம் கர்ரண் யார்க்கர் லெந்தில் அசத்தலாக வீசினார். முதல் 5 பந்துகளுக்கு வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார், கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தையும் யார்க்கராக வீசி 1 ரன்னை மட்டுமே கொடுத்தார். இதன்மூலம், இங்கிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. லோகேஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் லோகேஷ் 20 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் என 39 ரன்களை அடித்திருந்தார்.
ENG vs NEP: ரன்களை வாரி வழங்கிய ஆர்ச்சர், ரஷீத்
ஆர்ச்சர் 4 ஓவர்களை வீசி 1 விக்கெட்டை மட்டும் எடுத்து 42 ரன்களை கொடுத்தார். அனுபவ வீரர் அடில் ரஷித் 3 ஓவர்களை மட்டும் வீசி 42 ரன்களை கொடுத்தார், விக்கெட் எடுக்கவே இல்லை. சாம் கர்ரண் பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சில் 4 ஓவர்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தி 27 ரன்களை மட்டுமே கொடுத்தார். இவர் பந்தின் வேகத்தை குறைத்து வீசியதன் காரணமாகவே வெற்றி இங்கிலாந்து வசம் வந்தது. இவரின் வேரியேஷன்கள் பாராட்டத்தக்கது. பந்துவீச்சில் 1 விக்கெட்டையும், பேட்டிங்கில் 39 ரன்களையும் அடித்த வில் ஜாக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ENG vs NEP: மனமுடைந்துபோன நேபாள ரசிகர்கள்
போட்டி மும்பையில் நடந்தாலும் வான்கெடே மைதானம் முழுவதும் நேபாளம் அணி ரசிகர்கள்தான் நிரம்பி வழிந்தார்கள். ஒவ்வொரு பந்திற்கும் நேபாள அணிக்கு தங்களின் ஆரவாரமான ஆதரவை வழங்கினார்கள். ஆனால், கடைசி பந்தில் நேபாள அணி வெற்றிக் கோட்டை தாண்ட முடியாமல் போனதால் மிகவும் மனமுடைந்து போனார்கள்.
ENG vs NEP: தோற்றாலும் குவியும் பாராட்டு
இருப்பினும் நேபாள அணி நேர்மறையாக இத்தொடரை தொடங்கி உள்ளது, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறும்பட்சத்தில் நேபாளம் சூப்பர் 8 சுற்றுக்கு போக அதிக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் நேபாளம் அணி அடுத்த மூன்று போட்டிகளையும் மும்பையில்தான் விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் உலகில் இருந்தும் நேபாளம் அணிக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும் படிக்க | AFG vs NZ: ஒரே ஓவரில் 2 விக்கெட்.. அசத்திய சுழல் நாயகன்! வெற்றி பெறுமா நியூசிலாந்து அணி!
மேலும் படிக்க | சந்தோஷத்தில் CSK… பிளேயிங் லெவனில் இந்த வீரருக்கு இடம் உறுதி… பலமாகும் பந்துவீச்சு!
மேலும் படிக்க | இந்திய அணி போராடி வெற்றி… சறுக்கிய USA – முதல் நாள் புள்ளிப்பட்டியல் இதோ!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More