T20 World Cup Latest News: டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று (பிப்ரவரி 07) தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மூன்று போட்டிகளில் நடைபெற்ற நிலையில், இன்று காலை இத்தொடரின் 4வது போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் சண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.
Add Zee News as a Preferred Source
நியூசிலாந்துக்கு 183 ரன்கள் இலக்கு
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஜித் கான், பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் அதன்பின் சுதாரித்துக்கொண்ட ஆப்கான் அணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.
அசத்திய குல்புதீன் நயிப்
தொடக்க வீரர்களான இப்ராஹிம் சத்ரான் 10, ரஹ்மானுல்லா குர்பாஸ் 27 ரன்களில் வெளியேறினர். இதையடுத்து களம் வந்த குல்புதீன் மற்றும் செடிகுல்லா அடல் ஆகியோர் சிறுதி நேரம் களத்தில் நிலைத்து ரன்களை சேர்த்தனர். செடிகுல்லா அடல் 29 ரன்களில் வெளியேற, ஆனால் குல்புதீன் நயிப் தொடர்ந்து நின்று அரைசதம் கடந்து அசத்தினார். இந்த சூழலில், எதிர்பாராத விதமாக ரச்சின் ரவீந்திரா ஓவரில் ஆஃப் சைட் போட்ட பந்தை லெக் சைட் அடிக்க முயன்று குல்புதீன் நயிப் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 35 பந்தில் 63 ரன்கள் குவித்து வெளியேறினார்.
ஒரே ஓவரில் 2 விக்கெட்கள்
இதையடுத்து நியூசிலாந்து அணி 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இந்த சூழலில்தான், ஆப்கானிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். தொடக்க வீரரான ஃபின் ஆலன் மற்றும் ரச்சின் ரவீந்திராவை அடுத்தடுத்த பந்துகளில் போல்ட் செய்து அந்த அணிக்கு பெரும் தடுமாற்றத்தை கொடுத்தார்.
இருப்பினும் களத்திற்கு வந்த க்ளென் பிலிப்ஸ் தொடக்க வீரர் டிம் சீஃபர்ட் உடன் இணைந்து ரன்களை குவித்தார். இருவரும் 40 ரன்களை கடந்த நிலையில், 10வது ஓவரை வீச வந்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பிலிப்ஸ் விக்கெட்டை எடுத்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்த சூழலில், மார்க் சாப்மேன் மற்றும் சைஃபர்ட் ஆகியோர் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் பிளேயிங் 11
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷித் கான் (கேப்டன்), முஜீப் உர் ரஹ்மான், ஜியாவுர் ரஹ்மான் ஷரீபி, ஃபசல்ஹக் பாரூக்கி
நியூசிலாந்து பிளேயிங் 11
ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் (wk), ராச்சின் ரவீந்திர, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஜேம்ஸ் நீஷம்,
மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி.
About the Author
R Balaji