India vs Pakistan: இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலக கோப்பை சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்று, அடுத்து நமீபியா அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். அடுத்து வரும் பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி கொழும்புவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் நிலவி வருகிறது. காரணம் இந்தியாவிற்கு எதிராக டி20 உலக கோப்பையில் நாங்கள் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஐசிசி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைகளை விடுத்தது. ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தற்போது சமரசம் ஏற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் மூன்று முக்கிய கோரிக்கைகளை பாகிஸ்தான் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
PAKISTAN’S CONDITIONS TO PLAY THE MATCH AGAINST INDIA.
An increased share of ICC revenue.
The restoration of bilateral cricket with India.
Enforcement of the handshake protocols in the game. (Cricbuzz). pic.twitter.com/L0Mgqq1icW
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 9, 2026
பாகிஸ்தான் வைத்த 3 கோரிக்கை!
ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கூடுதல் வருவாய் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடரை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உலக கோப்பை போட்டியின் போது இந்தியா – பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே கை கொடுப்பது கண்டிப்பாக நடக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே இந்தியா உடனான போட்டியில் விளையாடுவது குறித்து பரிசீலிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பங்களாதேஷ் விவகாரம்!
இந்தியாவில் எங்களது வீரர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் கடைசி நேரத்தில் டி20 உலக கோப்பையில் இருந்து விலகியது. இதன் காரணமாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனங்களை தெரிவித்து இருந்தது. தற்போது இந்தியா – பாகிஸ்தான் போட்டியிலும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை கொண்டு வந்துள்ளது. “உலக கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்ட வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திற்கு, உள்கட்டமைப்பு மற்றும் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கூடுதல் நிதிப்பங்கீடு அல்லது நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் ஒன்றை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் அல்லது வங்காளதேசத்திற்கு வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளையும் பாகிஸ்தான் ஐசிசியிடம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் நிலை
இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அணி சனிக்கிழமை நடைபெற்ற தங்களது முதல் போட்டியில், நெதர்லாந்து அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியாவுடன் விளையாடுவது பற்றி இன்று திங்கட்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகே பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடுமா அல்லது விலகுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
About the Author
RK Spark