இந்திய வீரர் ஹர்ஷித் ராணாவுக்கு ஏற்பட்ட காயம்.. அவரே கொடுத்த அப்டேட்!

Harshit Rana Latest News: இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சமீப காலமாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். பயிற்சியாளராக கெளதம் கம்பீர் வந்த பின்னர் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அவர் பந்து வீச்சோடு ஓரளவு பேட்டிங்கும் செய்வதால், அவரை இந்திய அணியில் தொடர்ந்து வைத்துக்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஒரு போட்டியில் அரைசதம் விளாசி அசத்தினார். அதன்பின் இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தினார். 

Add Zee News as a Preferred Source

2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார். இந்த சூழலில், தொடர் தொடங்குவதற்கு முன்பாக நடந்த தொடரின் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார். அப்போது ஹர்ஷித் ராணாவுக்கு முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்தே விலகும் நிலை ஏற்பட்டது. 

உலகக் கோப்பையை விட்டு வெளியேறிய ஹர்ஷித் ராணா 

ஹர்ஷித் ராணா இந்திய அணியில் தேர்வாகி குறுகிய காலகட்டத்திலேயே உலகக் கோப்பை போன்ற பெரிய ஐசிசி தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், காயம் காரணமாக வெளியெறும் சூழல் ஏற்பட்டது, அவருக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கும். இந்திய அணியில் இருந்து அவர் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக முகமது சீராஜ் அணிக்குள் வந்தார். இந்த நிலையில், காயம் அடைந்த ஹர்ஷித் ராணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது காயம் தொடர்பாக ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. 

ஹர்ஷித் ராணாவுக்கு அறுவை சிகிச்சை 

அதாவது, முழங்கால் பகுதியில் ஹர்ஷித் ராணாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில், தனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக ஹர்ஷித் ராணா சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, என்னுடைய முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. நான் விரைவில் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி தரமான கம்பேக்கை கொடுப்பேன் என அதில் தெரிவித்துள்ளார். 

ஹர்ஷித் ராணா, இந்திய அணிக்காக இதுவரையில், 14 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் மொத்தமாக 39 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.