Abhishek Sharma Leaves Halfway Through Gambhir Party: 2026 டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 07) தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது . இதுவரை 7 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்திய அணி 3வது தொடரின் மூன்றாவது போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியது. அப்போட்டியில் இந்திய அணி சற்று தடுமாறிய நிலையில், 162 ரன்கள் இலக்கை அமெரிக்கா அணிக்கு வைத்தது.
Add Zee News as a Preferred Source
இந்தியா – நமீபியா
இதையடுத்து சிறப்பான பந்து வீச்சின் மூலம் அமெரிக்க அணியை இந்திய அணி கட்டுப்படுத்தியது. இதனால் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழலில், இந்திய அணி அடுத்த போட்டியில் நமீபியா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி டெல்லியில் இருக்கும் அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருப்பதால், இந்திய அணி வீரர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
கவுதம் கம்பீர் விருந்து: பாதியிலேயே வெளியேறிய வீரர்
பயிற்சியாளர் கெளதம் கம்பீரின் சொந்த ஊர் டெல்லி என்பதால், அவரது வீட்டில் இந்திய வீரர்கள் அனைவரும் விருந்து ஒன்றை கொடுத்துள்ளார். இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா விருந்தில் இருந்து பாதியிலேயே சென்றுள்ளார். இது தொடர்பான தகவல்கள் பரவி வந்த நிலையில், ஏதேனும் கருத்து வேறுபாடு காரணமாக அவர் அப்படி செய்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அவர் உடல்நல குறைவால்தான் விருந்தின்போது பாதியிலேயே எழுந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது என செய்திகள் வெளியாகி உள்ளது.
காய்ச்சலால் அவதிபடும் அபிஷேக் சர்மா
இந்திய அணியின் தொடக்க அதிரடி வீரர் அபிஷேக் சர்மா, ஏற்கனவே காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். அவர் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலேயே காய்ச்சலுடன் தான் விளையாடினார். இரண்டாவது பாதியில் அவர் ஃபீல்டிங் செய்யவில்ல என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கம்பீர் கொடுத்த விருந்தின்போது பாதியிலேயே சென்றதற்கு அவரது உடல்நலக் குறைவே காரணம் என தெரிகிறது.
இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயம்
ஏற்கனவே இந்திய அணியின் மூத்த வீரரான ஜஸ்பிரித் பும்ரா காய்ச்சல் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. அதிரடி வீரரான அபிஷேக் சர்மாவும் உடல்நல குறைவுடன் விளையாடி டக் அவுட் ஆகி உள்ளார். முன்னதாக ஹர்ஷித் ராணா காயம் காரணமாக தொடரை விட்டே வெளியேறினார். தற்போது அவருக்கு பதிலாக முகாமது சிராஜ் உள்ளே வந்தார். இப்படி இந்திய வீரர்கள் காயம் மற்றும் உடல்நலக் குறைவால் அவதிபட்டு வருவது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதுதான் காயத்தில் இருந்து குணமடைந்து வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். முன்னதாக திலக் வர்மா காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji